செவ்வாய், 6 மே, 2014

பெற்றதைப் பாடினார்கள்

பகவான் ஸ்ரீ ரமணரிடம் ஒரு வீணை வித்வாம்சினி ஒரு முறை `தியாகராஜ சுவாமிகளும் மற்ற சங்கீதப் பெரியோர்களும் பாடித்தானே மோக்ஷம் பெற்றார்கள். அவர்களைப்போல் நானும் இசையின் மூலம் மோக்ஷம் பெற இயலுமா?' என்று வினவினார்.


அதற்கு பகவான் `தியாகராஜரும் மற்றவர்களும் பாடிப் பெறவில்லை. பெற்றதைப் பாடினார்கள். அதனால் தான் அவர்களின் கீர்த்தனைகள் இன்னும் உயிருள்ளதாக இருக்கின்றன' என்றார். 

கருத்துகள் இல்லை:

பகவான் ரமணர் தன் கைப்பட வரைந்த திரு அருணை மலை. அருணாச்சல சிவ .அருணாச்சல சிவ . அருணாச்சல சிவ . அருணாச்சலா