சனி, 10 மே, 2014


அர்த்தமுள்ள இந்து மதம் நூலிலிருந்து…..
ஆந்திராவில் ஒரு கோவில் கட்டப்படுகிறது. அதன் மூலஸ்தானத்தில் இன்னும் சிலை வைக்கப்படவில்லை. அங்கே போய்க் காஞ்சிப் பெரியவர் ஓரிரவு தங்கினாராம். ‘தெய்வம் பிரதிஷ்டையாகி விட்டது என்று ஆந்திர மக்களெல்லாம் சந்தோஷப்பட்டார்களாம்.
இன்னும் ஐம்பது வருஷங்கள் போனால், ‘இந்து மதம் என்றால் என்ன?’ என்ற கேள்விக்கு ‘ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள்’ என்று எதிர்கால மாணவன் பதில் எழுதுவான்.
அந்த ஞானப் பழத்தை தரிசித்த போது நான் பெற்ற உள்ளொளியை விவரிக்க இயலாது.
தாய் குழந்தைக்குத் தாலாட்டுப் பாடும்போது, அவரைப் பற்றிப் பாட வேண்டும்.
பள்ளிக்கூடப் பாடப் புத்தகங்களில் அவரைப் பற்றிக் குறிக்க வேண்டும்.
புத்தன் சொன்னதை விட அவர் நமக்கு அதிகமாகச் சொல்லி இருக்கிறார்.
ஏசுவின் தத்துவங்களை விட அதிகமான தத்துவங்களை வாரி இறைத்திருக்கிறார்.
பகவான் கீதையில் சொன்னது போல் வாழ்ந்தவர் அவர் ஒருவரே.
அந்தக் காலடிச் சுவடுகளைத் தொடர்ந்து செல்லுங்கள்.
அதுவே உங்கள் யோகமாக இருக்கட்டும்.

கருத்துகள் இல்லை:

பகவான் ரமணர் தன் கைப்பட வரைந்த திரு அருணை மலை. அருணாச்சல சிவ .அருணாச்சல சிவ . அருணாச்சல சிவ . அருணாச்சலா