ஞாயிறு, 9 டிசம்பர், 2012


கல்லைத் தூக்கி சமுத்திரத்திலே போட்டா மூழ்கிடும். ஆனா மரத்தாலே கப்பல் பண்ணி, அதிலே எத்தனை கல் ஏத்தினாலும் மூழ்கிறதில்லே! கவலைகள் கல்லு மாதிரி,பகவான் தெப்பம் மாதிரி, மனசு என்கிற சமுத்திரத்திலே பகவானைத் தெப்பமாக்கணும். தெய்வத்தை இணைக்கிற ஆணிகள் தான் பூஜை மந்திரங்கள் எல்லாம். அப்புறம் கவலைகளைத் தூக்கி தெப்பத்தில் இறக்கலாம். சம்சாரசாகரத்தில் மூழ்கடிக்கப்படாமல் கரை சேர்ந்து விடலாம். Kanchi Mahaswamigal

வியாழன், 4 அக்டோபர், 2012


நான் கம்ப ராமாயணமும் படிக்கவில்லை, பகவத் கீதையும் படித்ததில்லை - பகவான் சொல்கிறார் : Asked if Sri Bhagavan had read Kamba Ramayana, Sri Bhagavan said: No. I have not read anything. All my learning is limited to what I learnt before my 14th year. Since then I have had no inclination to read or learn. People wonder how I speak of Bhagavad Gita, etc. It is due to hearsay. I have not read Gita nor waded through commentaries for its meaning. When I hear a sloka I think that its meaning is clear and I say it. That is all and nothing more. Similarly with my other quotations. They come out naturally. I realise that the Truth is beyond speech and intellect. Why then should I project the mind to read, understand and repeat stanzas, etc.? Their purpose is to know the Truth. The purpose having been gained, there is no use engaging in studies. Someone remarked: If Sri Bhagavan had been inclined to study there would not be a saint today. Maharshi: Probably all my studies were finished in past births and I was surfeit. There is therefore no samskara operating now in that direction.

புதன், 5 செப்டம்பர், 2012


A devotee: “I am afraid if I continue like this I shall go to hell.” Bhagavan, the ocean of compassion without reason, tenderly replied: “If you do Bhagavan will go after you and bring you back.” Source: Ramana Maharshi and the Path of Self-Knowledge, p.172

திங்கள், 30 ஜூலை, 2012


பகவான் கேட்ட குரு தக்ஷணை A disciple once lamented, "If you do not take pity on me what can I do? There is no sinner like me." Bhagavan: What is the connection between me and you? Disciple: You are my Gurudeva. Bhagavan: You say I am your Gurudeva but have you given me any guru-dakshina? Disciple: I have always been ready to make an offering but Bhagavan had never been ready to accept it. Please let me know what I should offer. Bhagavan: Are you sure you will not back out? Disciple: How can you say so, will I ever break a promise? Bhagavan: You gift me the fruits of all your meritorious acts (punya). Disciple: Why not? But I have no punya to my credit. Bhagavan: Give me whatever punya you have. Disciple: I hereby gift all the fruits of my punya to Ramana. Bhagavan: You said that you could give only a little, why not gift that which you have in abundance? Disciple: I shall do so. But let me know what I can give. Bhagavan: I will, but you must not back out. Disciple: Never, I shall never back out. Bhagavan: If so, give me all your sins. Disciple: Oh Bhagavan! I have committed innumerable sins. Bhagavan: I am not concerned with that. Will you give or not? With great anguish the disciple said, "I gift all my sins and their fruits to Ramana as ordered by him. I have nothing to do with them any more." Bhagavan: Now see, you have neither merit nor de- merit any more. As you are the Atma you don't have to grieve any more. Simply be, do nothing.

வெள்ளி, 27 ஜூலை, 2012

Bhagavan Ramana teaches the power of silence


`அமைதியே நம இயற்கை. ஒரு மனிதன் தனது அறைக்குள் அனேக சாமான்களை அடைத்து வைத்து விட்டு இடமில்லை என்று குறிப்படுவது போல நாமும் அமைதி கிட்டவில்லை என்கிறோம். சாமான்களை வெளியே எடுங்கள். அமைதி கிட்டும்.' Bhagavan ஒரு சமயம் பகவான் விஸ்தாரமாக ஒரு பொருளைப்பற்றி பேசுகையில் ஒரு அணுக்கத் தொண்டர் வானொலிப் பெட்டியை உரக்க இயக்கினார். பகவான் மௌனமானார். எல்லோருக்கும் வருத்தமாக இருந்தது. சற்று நேரத்தில் இயக்கியவரே அதை நிறுத்திய பிறகு பகவான் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார். குறுக்கீடு சம்பந்தமாக எந்த வருத்தமும் கோபமும் அவர் முகத்தில் தெரியவில்லை. ஒரு முக்கியமான தினம். ஆஷ்ரமத்தில் ஏழை எளியோருக்கு உணவு அளிக்கும் போது போஜன சாலையில் கூட்டம் அலைமோதியது. ஒரு ஆஷ்ரம நிர்வாகி சாதுக்களை உள்ளே போக விடாமல் விரட்டினார். பல சாதுக்கள் வெளியேற்றப்பட்ட பிறகு ஆஷ்ரம வாசிகள் சாப்பிட அமர்ந்தனர். பகவான் அவர் இடத்தில் காணப்பட வில்லை. ஆளுக்கு ஒரு மூலையில் அவரைத் தேடினர். ஒரு மரத்து நிழலில் அவர் அமர்ந்திருந்தார். `சாதுக்களை நீங்கள் வெளியேற்றினீர்கள். நானும் ஒரு சாது தானே. அதான் வெளி வந்து விட்டேன்' என்றார்.

வியாழன், 22 மார்ச், 2012

பகவான் ரமண மகர்ஷி மற்றும் காஞ்சி மகாஸ்வாமிகளின் பொன் மொழிகள்

சங்கர பகவத்பாதர்கள் பக்தியின் லக்ஷணத்தை சிவானந்த லஹரியில் இவ்வாறு வர்ணித்திருக்கிறார்:

"அழிஞ்சில் விதை எப்படித் தாய் மரத்துடனேயே ஒட்டிக் கொள்கிறதோ, ஊசி எப்படி காந்தத்தால் கவரப் படுகிறதோ, பதிவிரதை எப்படி தன் பதியின் நினைவிலேயே ஆழ்ந்திருக்கிறாளோ, கொடி எப்படி மரத்தைத் தழுவி வளர்கிறதோ, நதி எப்படி சமுத்திரத்தில் கலக்கிறதோ, அப்படியே பசுபதியின் பாதாரவிந்தங்களில் எக்காலமும் மனத்தை அமிழ்த்தியிருப்பதுதான் பக்தி என்பது.


சின்னஞ்சிறிய சூஷ்மமான தர்மங்களை எல்லாம் மறந்துவிட்டோம். நமக்கு உணவு தருபவனுக்கு நல்லபடி நிவேதனம் நடக்கவேண்டும். நமக்கு உடை தருபவனுக்கு நல்ல வஸ்திரம் இருக்கவேண்டும். இப்போது ஓர் ஊரில் யார் அழுக்குத் துணிகட்டிக் கொண்டிருக்கிறான் என்றால் அது ஸ்வாமிதான். நம் ஊர் கோயில் ஸ்வாமியின் வஸ்திரம் சுத்தமாயிருக்கிறதா என்பதில் கவனம் செலுத்திவிட்டோமானால், நம்மனதின் அழுக்கு போய்விடும்.

நம்முடைய சாஸ்திரங்களில் இல்லாத ஸயன்ஸ் எதுவுமே இல்லை. ஆயுர்வேதத்தை சரகர், சுச்ருதர் முதலானவர்களின் நூல்களைப் பார்த்தால். இப்போதைய பெரிய டாக்டர்களும் அதிசயிக்கும்படியான மருத்துவ முறைகளையும், சர்ஜரி முறைகளையும் தெரிந்து கொள்கிறோம். நவீன மருந்துகளைவிட, நவீன சர்ஜரிக்கு நாம் பழக்கமாகிவிட்டதால், ஆயுர்வேதத்தில் சர்ஜரிக்கு இடமில்லை என்று பலர் நினைக்கிறார்கள். என்ஸைக்லோபீடியா பிரீடானிகாவில் கூறியிருக்கிறபடி, சர்ஜரி இந்தியாவில்தான் தோன்றியது. தன்னுடைய மிகத் தீவிரமான பக்தியைப் பற்றிக் குறிப்பிடும்போது, குலசேகர ஆழ்வார் "வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால் மாளாத காதல் நோயாளன்போல்" என்கிறார். அறுப்பது" என்பது சர்ஜரி. "சுடுவது" காடரைஸேஷன் [Cauterisation] .

எனக்கு கனகாபிஷேகத்துக்கும், பீடாரோஹணத்துக்கும் காட்டுகிற உற்சாகத்தை வேத ரக்ஷணத்தில் காட்டி அதற்காகக் கமிட்டி, திட்டம், வசூல் எல்லாம் செய்யுங்கள் என்கிறேன். வேத ரக்ஷணத்தை அடுத்த சந்ததிக்கு ஜீவிய கர்மமாக ஆயுட்காலப் பணியாக வைக்க முடியாவிட்டால் கூடப்போகிறது.

எட்டு வயதிலிருந்து ஆரம்பித்துப் பிறகு, பத்து வருஷங்களுக்கு இளம் பிள்ளைகளுக்கு தினம் ஒரு மணிநேரம் வேத மந்திரங்களிலும், பிரயோகங்களிலும் பேட்டைக்குப் பேட்டை கூட்டுறவு அடிப்படையில் ஏற்பாடு செய்யுங்கள் என்கிறென்.

இதுதான் எனக்கு உண்மையான கனகாபிஷேகம், உற்சவம் எல்லாம்.

ஒருவருக்குச் சொந்தமாக கொஞ்சம் நிலம் இருக்கிறதென்று வைத்துக் கொள்வோம். அதில் வருஷத்திற்க்கு வருஷம் விளைச்சல் அதிகமாகிறது. "இந்த வயல் என்னுடையது"என்பதால் விளைச்சல் அதிகமாகும்போதெல்லாம் அவருக்கு மனம் குளிர்கிறது. ஆனந்தம் உண்டாகிறது. பிறகு விளைச்சல் குறைய தொடங்குகிறது. வயலை
வேறு ஒருவருக்கு விற்று விடுகிறார். மறுபடியும் அதே நிலத்தில் விளைச்சல் கூடுகிறது. இப்போது அதைப் பார்க்கும்போது அவருடைய மனம் குளிரவா செய்கிறது?"அட டா, போன வருஷம் நம்மிடம் இருக்கிறபோது
நிலம் தரிசு போல் பொட்டலாக இருந்தது, இப்போது எவனோ ஒருவனுக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறதே" என்று
வயிற்றெரிச்சல்தான் உண்டாகிறது.

"எனது" என்ற சம்பந்தம் இருந்த மட்டும்தான், அமோக விளைச்சலால் சந்தோஷம் ஏற்பட்டது. பிறகு அதே விளைச்சலில் உணர்ச்சி அடியோடு மாறிவிட்டது.

-mahaswamigal

Pradosha mama's voice, courtesy sage of kanchi site

https://mahaperiyavaa.blog/2024/02/02/ithanai-yamatrai-mahaperiyava-karavalambam-in-sri-pradosham-mamas-voice/