`அமைதியே நம இயற்கை. ஒரு மனிதன் தனது அறைக்குள் அனேக சாமான்களை அடைத்து வைத்து விட்டு இடமில்லை என்று குறிப்படுவது போல நாமும் அமைதி கிட்டவில்லை என்கிறோம். சாமான்களை வெளியே எடுங்கள். அமைதி கிட்டும்.' Bhagavan
ஒரு சமயம் பகவான் விஸ்தாரமாக ஒரு பொருளைப்பற்றி பேசுகையில் ஒரு அணுக்கத் தொண்டர் வானொலிப் பெட்டியை உரக்க இயக்கினார். பகவான் மௌனமானார். எல்லோருக்கும் வருத்தமாக இருந்தது. சற்று நேரத்தில் இயக்கியவரே அதை நிறுத்திய பிறகு பகவான் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார். குறுக்கீடு சம்பந்தமாக எந்த வருத்தமும் கோபமும் அவர் முகத்தில் தெரியவில்லை.
ஒரு முக்கியமான தினம். ஆஷ்ரமத்தில் ஏழை எளியோருக்கு உணவு அளிக்கும் போது போஜன சாலையில் கூட்டம் அலைமோதியது. ஒரு ஆஷ்ரம நிர்வாகி சாதுக்களை உள்ளே போக விடாமல் விரட்டினார். பல சாதுக்கள் வெளியேற்றப்பட்ட பிறகு ஆஷ்ரம வாசிகள் சாப்பிட அமர்ந்தனர். பகவான் அவர் இடத்தில் காணப்பட வில்லை. ஆளுக்கு ஒரு மூலையில் அவரைத் தேடினர். ஒரு மரத்து நிழலில் அவர் அமர்ந்திருந்தார். `சாதுக்களை நீங்கள் வெளியேற்றினீர்கள். நானும் ஒரு சாது தானே. அதான் வெளி வந்து விட்டேன்' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக