வெள்ளி, 11 நவம்பர், 2016

வியாஸர் பதினெட்டு புராணங்களையும் பண்ணி முடித்தபின் சிஷ்யர்கள் அவற்றின் ஸாராம்சத்தை ஒன்றிரண்டு ச்லோகங்களில், ஸுலபமாக நினைவில் வைத்துக் கொள்ளும்படியாகச் சுருக்கித் தரும்படிப் பிரார்த்தித்தார்களாம். உடனே அவர் “ஒன்றிரண்டு ச்லோகம் எதற்கு? இந்தப் பதினெட்டுப் புராணம் மட்டுமின்றி மொத்தமிருக்கிற கோடிப் புஸ்தகங்களின் ஸாரத்தையும் அரை ச்லோகத்திலேயே சொல்கிறேன்”, “ச்லோகார்தேந ப்ரவக்ஷ்யாமி யதுக்தம் க்ரந்தகோடிஷு |” என்று ஒரு ச்லோகத்தின் முதல் பாதியாகச் சொல்லிவிட்டு மற்ற பாதியில் அந்த ஸாரமான தத்துவத்தைச் சொன்னாராம்:
”பரோபகார: புண்யாய பாபாய பரபீடநம் ||”
இருக்கிற அத்தனை கோடி மத சாஸ்திர புஸ்தகங்களுக்கும் உயிர் நிலையான தத்வம் என்னவென்றால், “புண்யம் ஸம்பாதிக்க வேண்டுமானால் பரோபகாரம் பண்ணு; பாபத்தை மூட்டை கட்டிக் கொள்வதனால் மற்ற ஜீவன்களுக்குக் கஷ்டத்தைக் கொடு” என்பதுதான் – என்று இதற்கு அர்த்தம்.
பாபம் எது என்று தெரிந்து கொண்டு அதை விலக்குவதற்கும், புண்யம் எது என்று தெரிந்து கொண்டு அதைப் பண்ணுவதற்குந்தான் மதம் என்பதே இருக்கிறது. இங்கே நம் மதத்துக்கு முக்யமான மூல புருஷர்களில் முதன்மையாயிருக்கிற வ்யாஸாசார்யாள் பர உபகாரம் தான் புண்யம், பர அபகாரம்தான் பாபம் என்று சொல்கிறாரென்றால், அதற்கப்புறம் நம் மதத்தில் பரோபகாரத்துக்கு இடமுண்டா என்ற வாதத்துக்கே இடமில்லை. – ஜகத்குருஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

செவ்வாய், 18 அக்டோபர், 2016

“ ஒரு ஞானி பக்தர்களைக் காப்பாற்றுவான் . ஆனால் சங்கலபத்தாலே இல்லை. அவனது சந்நிதி விசேஷத்தாலே ”

Courtesy Sri ramana mandiram
சந்நிதி மகிமை
ஒரு நாள் பக்தர் ஒருவர் மிகுந்த மன வேதனையுடன் பகவானிடம் ஒரு சந்தேகம் கேட்டார். “ பகவான் நீங்க நினைச்சா பக்தர்களுடைய தலையெழுத்தை மாற்ற முடியுமா ? ”
பகவான் சிரித்தார் . ஞானிக்கு ஏது சங்கல்பம் ? ஒரு ஜீவன் முக்தனுக்கு சங்கல்பம் இருக்கவே முடியாது , அது சாத்தியமில்லை , ” என்றார்.
அப்போ எங்க கதிதான் என்ன ? எங்க கஷ்டங்களைப் போக்க உங்க கிட்டதானே வேண்டுகிறோம். அதற்கு பலனில்லையா என்றார் ஒரு பக்தர்.
கருணை தோய்ந்த குரலில் , “ ஒரு ஞானியின் சந்நிதியில் அமர்ந்தால் ஒருவரது பாவச்சுமை கணிசமாகக் குறையும். ஞானிக்கு சங்கல்பம் இல்லை. இருந்தாலும் அவனது சந்நிதி ரொம்ப சக்தி வாய்ந்தது. ஞானி பேசாம இருப்பான். அவன் சந்நிதி , தலையெழுத்தை மாற்றும் , காப்பாற்றும் , சாந்தி தரும். பக்குவமானவனுக்கு ஆன்மானுபவம் தரும். எல்லாம் தானா நடக்கும். அவனுக்கும் அதுக்கும் எந்த சமபந்தமும் இருக்காது , ” என்று பேசினார் பகவான்.
“ ஒரு ஞானி பக்தர்களைக் காப்பாற்றுவான் . ஆனால் சங்கலபத்தாலே இல்லை. அவனது சந்நிதி விசேஷத்தாலே ” என்றார் மகரிஷி

சனி, 15 அக்டோபர், 2016

ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

ஊமைகளைப் பேசவைக்கும் பிருந்தாவனம், முடவர்களை நடக்க வைக்கும்  பிருந்தாவனம் - பெரியவா


http://mahaperiyavapuranam.org/mookam-karoti-vaachalam/
மஹாஸ்வாமிகளின்  அறிவுரை 

தாம்யத, தத்த, தயத்வம் :  அடங்குங்கள், தானம் செய்யுங்கள், எல்லோரையும் நேசியுங்கள்


https://mahaperiyavaa.wordpress.com/2016/09/17/maithreem-bhajatha-a-heart-melting-rendition/


வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

Sathyam Advaitam.
Read about the greatness of mouna guru swamigal. Visit his samadhi near Kumbeshwarar temple, Kumbakonam when you can.


http://vandeguruparamparaam.blogspot.com/2016/08/mahaperiyava-did-dhanda-namaskaram-to.html


Mahaperiyava says: 
Adwaitham & Atomic Science
காண்கிற உலகம் பலவிதமாக இருந்தாலும், ஒன்றேதான் இத்தனையும் ஆகியிருக்கிறது என்பதை நவீன ஸயன்ஸ் தெளிவாக ஒப்புக் கொண்டு நிலை நாட்டுகிறது. ஐம்பது வருஷங்களுக்கு முன் உலக வஸ்துக்கள் எல்லாம் எழுபத்திரண்டு மூலப்பொருள்களுக்குள் (Elements) அடங்குவதாக ஸயன்ஸ் சொல்லி வந்தது. இந்த மூலப்பொருள்கள் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டவை என்பதே அன்றைய கருத்து. ஆனால், இப்போது அணு (Atom) பற்றி அறிவு விருத்தியான பின் இந்த மூலப்பொருள்கள் எல்லாமும்கூட வேறு வேறான பொருள்கள் அல்ல என்றும், ஒரே சக்தி (Energy) தான் இவை எல்லாமாகவும் ஆகியுள்ளது என்றும் ஸயன்ஸ் நிபுணர்கள் நிலைநாட்டியிருக்கிறார்கள். பொருள் (Matter) சக்தி (Energy) – இவையும் வேறானவை அல்ல என்று நவீன ஸயன்ஸ் சொல்லுகிறது. ஆக, அத்வைதம்தான் ஸயன்ஸும் நமக்குக் காட்டுகிற உண்மை. ஐன்ஸ்டைன், ஸர் ஜேம்ஸ் ஜீன்ஸ் போன்ற பிரபல ஸயன்ஸ் நிபுணர்கள் உபநிஷதமும் சங்கர பகவத் பாதாளும் உபதேசித்த அத்வைத சித்தாந்தத்துக்கு மிகவும் நெருங்கி வந்து விட்டார்கள்.
உலகம் மாயை என்று அத்வைதம் கூறுவதற்குப் பொருள் யாதெனில், ‘உலகம் இறுதி சத்தியமல்ல! இது விவகாரத்துக்கு மட்டுமே சத்தியம்; இதனுடைய இருப்பும் பிரம்மம் என்ற ஒன்றைச் சார்ந்ததே’ என்பதுதான்; இதையே மேற்சொன்ன ஸயன்ஸ் நிபுணர்களும் சொல்கிறார்கள். பிரம்மமே பாரமார்த்திக சத்தியம், உலகம் விவகாரிக சத்தியமே என்று அத்வைதம் சொல்வதைத்தான் இவர்கள் “உலக இயக்கமெல்லாம் இன்னொன்றைச் சார்ந்தவை (“relative”) தான்; முழு உண்மை (“absolute”) அல்ல” என்கிறார்கள்.
சக்தியும் பொருளும் ஒன்று என்ற பெரிய உண்மையைக் கண்ட அணு விஞ்ஞானிகள் அந்த அறிவைக் கொண்டே அணுகுண்டைக் கண்டுபிடித்தார்கள் என்பதுதான் துக்கமாக இருக்கிறது. வெளி உலக வஸ்துக்களைக் குறித்து ஸயன்ஸால் நிலைநாட்டப்படும் அத்வைதம் புத்தி மட்டத்தோடு நின்றதன் அனர்த்தம் இது. ஸயன்ஸின் அத்வைதம் வெறும் அறிவோடும், வெளி உலகத்தோடும் மட்டும் நிற்காமல் வெளி உலகத்துக்கு காரணமான உள் உலக உண்மையையும் ஆராய்ந்து, புத்தியோடு நிற்காமல், மக்களின் பாவனையிலும் தோய வேண்டும். ஜீவ குலம் எல்லாம் ஒன்றுதான் என்ற ஞானமும் ஸயன்ஸ் வழியாக ஏற்பட்டால், அணுகுண்டைத் தயாரித்த நவீன ஸயன்ஸே ஆத்ம ஹானிக்குப் பதிலாக மகத்தான ஆத்ம க்ஷேமம் செய்ததாகவும் ஏற்படும்.

வியாழன், 11 ஆகஸ்ட், 2016


`நச்சென்று' முதுமையைக் கொண்டாடுங்கள் - மஹாபெரியவர் சொல்கிறார்.

“நாங்கள் ‘ரிடையர்’ ஆன கிழங்களாச்சே! தொழிலை விட்டு விட்டவர்களாச்சே! எங்களால் என்ன உதவி பண்ண முடியும்?” என்கிறீர்களா? உங்களால் முடியாதா? உங்களால்தான் ஜாஸ்தி முடியும் என்று உங்களைத்தான் இத்தனை நாழி எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். நீங்கள் உங்களைப் பட்டுப் போன மரம் என்று நினைக்க வேண்டாம். மனஸ் வைத்தால் நீங்கள் தான் இந்த தேசத்தை தேவலோகமாக்கக் கூடிய கல்பக வ்ருக்ஷங்கள் என்று நான் நினைக்கிறேன். தெய்வ பலத்தை தனக்காக இல்லாமல், உலகத்துக்காகச் செய்தால் கிழத்தனத்தின் பலஹீனமும் ஓய்ச்சலும் இல்லாமல் யுவர்களைவிட உத்ஸாஹமாகப் பண்ணலாம். கிழவன் நானே சொல்கிறேன்.
மற்றவர்கள் ஆஃபீஸ் காரியம் போக மிஞ்சிய கொஞ்சம் போதில்தான் பொதுத்தொண்டு பண்ண முடியுமென்றால் ரிடையரான நீங்களோ புல் டைமும் ஸோஷல் ஸர்வீஸ் பண்ணுகிற பாக்யம் பெற்றிருக்கிறீர்கள். ஆஃபீஸுக்குப் போய்வந்த காலத்தில் உங்களுக்குக் குடும்ப பொறுப்பும் அதிகம் இருந்தது. இப்போது அதுகளைக் கூடியவரையில் குறைத்துக் கொள்ள வேண்டும். அநேகமாக ரிடையர் ஆகிற வயஸில் ஒருத்தனுக்கு நேர் பொறுப்பு உள்ள பிள்ளைகளின் படிப்பு, பெண்ணின் விவாஹம் முதலான கார்யங்கள் முடிந்திருக்கும்.அதற்கப்புறமும் பேரன் படிப்பு, பேத்தி கல்யாணம் என்றெல்லாம் இழுத்துப் போட்டுக் கொண்டேயிருந்தால் அதற்கு முடிவே இருக்காது. –ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

வெள்ளி, 3 ஜூன், 2016


பகைவருக்கும் அருளிய பகவான்
(Courtesy: Dinamani, Tamil Daily) 
விருபாக்ஷ குகையில் பகவான் தங்கியிருந்த நாட்களில் கூட இருந்த மிகச் சில அடியார்களில் பெருமாள் சுவாமியும் ஒருவர்.  ஒரு முறை பழனிச்  சுவாமியும் பெருமாள் சுவாமியும் வெளியே போயிருந்த சமயம் விருபாக்ஷ  குகைக்கு சில பயங்கரத் தோற்றமுடைய பைராகிகள் வந்தனர். பகவான் தனியாக இருக்கிறாரா என்பதை உறுதி செய்து கொண்டு அவரிடம் `நாங்கள் பொதிகை மலையிலிருந்து வருகிறோம். அங்கே ஒரு பெரிய சித்தரைச் சந்தித்தோம். அவர் உங்களை பொதிகை மலைக்கு அழைத்து வரச் சொன்னார்.' என்றனர். பகவான் வெறுமனே மௌனம் காத்தார். சில மர வெட்டிகள் பகவான் குகையில் சில பைராகிகள் இருப்பதை வழியில் பழனிச் சாமியிடமும் பெருமாள் சாமியிடமும் சொல்ல அவர்கள் குகைக்கு விரைந்தனர். பெருமாள் சாமி பைராகிகளைப் பார்த்து விட்டு சந்தைக்கு விரைந்து சென்று ஒரு பெரிய அண்டாவையும் டின் டின்னாக எண்ணையும் வாங்கிவந்து விறகுகள் சேர்த்து அண்டாவில் எண்ணையைக் கொட்டி கொதிக்க வைக்க ஆரம்பித்தார். பைராகிகள் அது என்னவென்று வினவ `நீங்கள் சொன்ன சித்தர் என் கனவிலும் வந்தார். நாளை சில பைராகிகள் உங்கள் குகைக்கு வருவார்கள். அவர்கள் சக்தி வாய்ந்தவர்கள். நீ வேண்டுமென்றால் அவர்களைச் சோதிக்க அவர்கள் உடம்பில் காய்ச்சிய எண்ணையைக் கொட்டிப் பார். எந்த தீக்காயமும் அவர்களைத் தீண்டாது.' என்றார். அதைச் செய்து பார்க்கத் தான் எண்ணெய் காய்ச்சுகிறேன். சித்தர் வார்த்தையை நான் தட்டக்கூடாது அல்லவா?' என்றார். பைராகிகள் பெருமாள் சுவாமி உள்ளே சென்ற சமயம் மெதுவாக நழுவி விட்டனர். பகவான் உட்பட அனைவரும் நடந்தது பார்த்து சிரித்து ரசித்தனர்.               
.பகவானுடன் தங்கியிருந்த நாட்களில் அவரும் மற்றவர்களும் சாப்பிட ஊருக்குள் சென்று பிக்ஷை எடுத்துக் கொண்டு வருவது பெருமாள் சுவாமியின் வழக்கம். ஒருமுறை ஒரு அழகான பாடலை பகவான் பெயரில் பெருமாள் சுவாமி எழுதி வந்தார். தாம் தான் எழுதியதாகச் சொன்னதும் பகவான் அதைப் படித்துப் பார்த்துவிட்டு அவரைப் பாராட்டி முருகனாரிடம் அதை நோட்டுப் புத்தகத்தில் எழுதிப் பாதுகாக்கச் சொன்னார். நான்கு நாட்களுக்குப் பிறகு இன்னுமொரு பாடல் கொண்டு வந்தார். பகவானும் மற்றவர்களும் அவரைப் பாராட்டினர். சில நாட்களுக்கு ஒருமுறை பெருமாள் சுவாமி பாடல் கொண்டு வருவதும் அது வராவிட்டால் `ஏன் பிறகு எழுதவில்லை?' என்று பகவான் கேட்பதுமாக இருந்தது. ஒரு பத்து பாக்கள் வந்த பிறகு தான் அவற்றை எங்கோ தாம் படித்தது பகவான் நினைவிற்கு வர அவர் முருகனாரை திருவருட்பா புத்தகம் எடுத்து வரச் சொல்லிப் பார்த்தார். அதில் ராம பதிகம் என்ற தலைப்பில் அந்தப் பாடல்கள் அப்படியே இருந்தன. `ராமா ' என்ற இடங்களில் எல்லாம் `ரமணா' என்று பெருமாள் சுவாமி மாற்றியிருந்ததும் வெட்டவெளிச்சமானது. மற்றவர்கள் கிண்டலுடன் பெருமாள் சுவாமியைப் பார்த்ததும் பகவான் `என்ன செய்வது? இங்கே வருகிற எல்லோருமே பாடவும் எழுதவும் தான் செய்கிறார்கள். முடிந்தவர்கள் எழுதுகிறார்கள். முடியாதவர்கள் எழுதியதைப் பயன்படுத்தி படித்துப் பார்த்து ரசிக்கிறார்கள். இப்போது என்ன? ரமணாவும் ராமாவும் ஒன்று தான். விடுங்கள்' என்றார்.                         

ஆரம்ப காலக் கட்டத்தில் ஸ்கந்தாஷ்ரமத்திற்கு பெருமாள் சுவாமி மேலாளராக இருந்தார். பின்னர் ரமணாஷ்ரமம் ஆரம்பிக்கப் பட்ட பின்னரும் சிறிது காலம் பணியாற்றினார். பொதுப் பணம் கையாண்ட குற்றத்தில் அவரை பகவானின் பூர்வாசிரம தம்பி சின்ன சுவாமி நீக்கிவிட்டு அவரே மேலாளர் பொறுப்பேற்றார். அப்போது முதல் பகவான் மேல் பெருமாள் கோபத்துடன் இருந்தார். பகவான் பக்தராக இருந்த சமயத்தில் பொது மக்களிடமிருந்து பணம் சேகரித்து ஒரு அருமையான பகவான் சிலையைச் செய்து பெருமாள் சுவாமி வழிபட்டு  வந்திருந்தார்.  பின்னாட்களில் அதே கல் சிலையை திருவருணை வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று மக்களிடம் `இதன் மேல் துப்புங்கள். செருப்பு மாலை போடுங்கள்' என்று சொன்னார். பகவானைப் பற்றி தெரிந்திராத ஒரு நபருக்குக் கள் வாங்கிக் கொடுத்து அவர் பகவானைக் கண்டபடி பேச வைத்தார். ஆனால் இது எல்லாவற்றையும் மிஞ்சும்படி அவர் செய்தது தான் பகவான் மேல் வழக்கு தொடுத்து அவரை வழக்காடு மன்றத்திற்கு இழுக்க முயன்றது. பகவான் ஒரு சன்யாசி என்பதால் அவர் உலகத்தைத் துறந்தவர். ஆஷ்ரமம் எதுவும் அவர் நடத்த முடியாது. தம்பி போன்ற பந்தங்களைத் துறந்தவர். ஆகவே சின்ன சுவாமியை வைத்தும் சொத்து சேர்க்க முடியாது. நான் தான் கந்தாஷ்ரம காலத்திலிருந்து இங்கே மேலாளராக இருக்கிறேன். ஆகவே நான் தான் ரமணாஷ்ரம சொந்தக்காரன்.' என்று பெருமாள் சுவாமி வாதாடினார்.        
இருப்பினும் பிரிட்டிஷ் அரசு பகவான் மகிமையை ஓரளவு அறிந்திருந்ததாலும் ஒரு பக்தர் முயற்சியாலும்   வழக்கு  விசாரணை ரமணாஷ்ரமம் வளாகத்திலேயே நடந்தது. பகவான் தான் ஒரு அதியாஷ்ரமி என்ற வாதத்தை முன் வைத்து வாதாடினார். `நான்கு ஆஷ்ரம விதிகளுக்கும் உட்படாதவர்கள் அதியாஷ்ரமிகள். இவர்களை சாஸ்திரம் முழு மனதோடு ஏற்றுக்கொள்கிறது. சுகர் போன்று பலர் இந்த ஆஷ்ரமத்தில் இருந்தவர்கள் தாம். நான் கல்யாணமாகாதவன் என்றாலும் சுகர் திருமணமும் செய்து கொண்டு சந்ததியையும் உண்டாக்கினார்.          அதியாஷ்ரமிகள் அது மாதிரி வீடு போன்று சொத்துகளையும் சேர்க்கலாம்.’    என்று விரிவாகத் தம் வாதத்தை முன்வைத்தார் பகவான். `என் ஆத்மாதான் என் குரு' என்றும் அவர் சொன்னபோது எதிர்தரப்பு வக்கீலால் எதுவும் பேச முடியவில்லை. வழக்கு ஒரு வழியாக ஆஷ்ரமம் சார்பாக முடிந்தது.    
ஆனாலும் பெருமாள் தொடர்ந்து அவதூறு செய்திகள் அடித்து ஆஷ்ரம வாசலிலேயே விநியோகிப்பது என்று பகவானுக்கு எதிராகப் பரப்புரையைத் தொடர்ந்து செய்து வந்தார். விரைவிலேயே அவர் உடல்நிலை மோசமானது. அவரிடம் பணம் பெற்றவர்கள் அவரை ஏமாற்றி விட்டனர். கையில் பணமும் இல்லாமல், உடல் நிலையும் மோசமாகி அவர் டவுனில் ஒரு பெஞ்சில் அமர்ந்து கொண்டு வருவோர் போவோரிடம் பிச்சை கேட்கும் நிலைக்குத் தள்ளப் பட்டார். 1945ம் வாக்கில் அவர் தங்கியிருந்த துர்கை ஆலயத்திருந்தும் அவர் அகற்றப்பட்டார். கடைசி நாட்களில் சேஷாத்ரி ஆஷ்ரம வளாகத்தில் ஒரு குடிசையில் தங்கினார்.        
சில ரமணாஷ்ரம பக்தர்கள் அவர் மேல் பரிதாபப்பட்டு பகவானின் ரகசிய அனுமதி பெற்று அவர் ஆஷ்ரமத்திலிருந்து மருந்தும் உணவும் சர்வாதிகாரிக்குத் தெரியாமல் கொடுத்து வந்தார்கள்.

பகவானுக்கு அவர் மேல் தொடர்ந்து பரிவு இருந்தது. `பாவம் பெருமாள் சுவாமி, ஆரம்ப காலத்தில் அவர் நமக்கு நிறைய செய்திருக்கிறார். நான் ஒரு முறை வயிற்றுக் கோளாறு வந்து உடலிலிருந்து நீர் வெளியேறி அவதிக்குள்ளான போது அவர் தான் என்னருகில் இருந்து சிஷ்ருசை செய்தார். பின்னர் என்னவோ கோர்ட் கேஸ்  அது இது என்று நிலைமை மாறி விட்டது. இன்று பாவம், நோயில் வாடுகிறார்.' என்றார்.           
கடைசியில் ஒரு வழியாகத் தம் தவறை பெருமாள் உணர்ந்தார். பகவானைப் பார்த்து `பகவான், உங்களுக்கு எதிராக நான் பல தவறுகள் இழைத்திருக்கிறேன். எனக்கு மன்னிப்பு கேட்கப் போவதில்லை. ஆனால் மறந்து விடாதீர்கள். நான் நரகம் தான் போகப் போகிறேன்.' என்றார். பகவான் வழக்கமான பரிவுடன் `அங்கேயும் நான் உங்கள் கூட இருப்பேன்' என்றார்.          
பக்தனாக நெடு நாட்கள் பகவான் கூட இருந்து பகைவனான பெருமாள் சுவாமியின் சரிதத்தில் நிறைய பெருமிதமும் படிப்பினையும் ஒரு சேரக் கலந்திருக்கின்றன.
(bhagavan ramana maharshi’s 66th aradhana falls on 4th May 2016)
ஸ்ரீதர் சாமா



வெள்ளி, 29 ஏப்ரல், 2016

‘Self has no space or time’

‘Self has no space or time’: One of his disciples, T.K. Sundaresa Iyer, in his book, “At the feet of Bhagavan,” narrates an episode. A poor couple from Peru, who considered Sri Ramana as Christ, was determined to meet him. So th

Pradosha mama's voice, courtesy sage of kanchi site

https://mahaperiyavaa.blog/2024/02/02/ithanai-yamatrai-mahaperiyava-karavalambam-in-sri-pradosham-mamas-voice/