வியாழன், 17 ஏப்ரல், 2014


'அஸாவாதித்யோ ப்ரஹ்மா;ப்ரஹ்மைவாகமஸ்மி'
(பெரியவாளின் சாட்டையடி பதில்)
சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
"சில யோகிகள்,சித்த புருஷர்கள் பல காலம் வரை
ஸ்நானம் செய்வதில்லை. ஜபம்,தவம் செய்வதில்லை.
ஆகார நியமங்களும் கிடையாது.
ஆனால், அவர்கள், பல அமானுஷ்யமான காரியங்களைச்
செய்து காட்டி நம்மைப் பிரமிக்க வைக்கிறார்கள். செப்பிடு
வித்தை மாதிரி வெறும் பொய்த் தோற்றம் இல்லை.
அப்பிடியிருக்க, நாம் ஏன் நாள்தோறும் ஸ்நானம் செய்ய
வேண்டும்.? மடி - ஆசாரம்; விரதம் - உபவாசம் என்றெல்லாம்
கடைப்பிடிக்கணும்.? நெற்றிக்கு எதற்காகத் திலகம் வைத்துக்
கொள்ளணும்.? யோகிகள் திருநீறு இட்டுக் கொண்டார்களா.?
நாமம் போட்டுக் கொண்டார்களா.?...."
- இத்தகைய குறும்புத்தனமான கேள்விகளைக் கேட்டார்
ஒருவர், பெரியவாளிடம்.
பெரியவாள் பார்வையை எங்கெங்கெல்லாமோ மெல்ல
மெதுவாகச் செலுத்திவிட்டு கிட்டத்துக்கு வந்தார்கள்.
"ஸந்த்யாவந்தனம் செய்யும் போது,
'அஸாவாதித்யோ ப்ரஹ்மா;ப்ரஹ்மைவாகமஸ்மி' என்கிறோம்.
அதாவது 'நமக்குள்ளே பகவான் இருக்கிறார்.
நான் பரப்ரஹ்ம வஸ்துவாக இருக்கிறேன்' என்கிறோம்.
பகவான் இருக்கிற இடம் பவித்ரமாக இருக்க வேண்டாமா.?
அதனால்தான் ஸ்நானம்-ஸந்த்யை-தேவதார்ச்சனம்
முதலியன ஏற்பட்டிருக்கு.
ஈஸ்வரத் தன்மையை அடைந்து விட்ட மகா புருஷர்களுக்கு,
சித்தசுத்தி ஏற்பட்டு விட்டதால், ஸ்நானம் -ஜபம் - ஆசாரம்
போன்றவை தேவையில்லை!"
கேள்வி கேட்டவர்,முற்றிலும் சந்தேகம் நீங்கியவராய்,
பெரியவர்களுக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டுப் போனார்.

கருத்துகள் இல்லை:

பகவான் ரமணர் தன் கைப்பட வரைந்த திரு அருணை மலை. அருணாச்சல சிவ .அருணாச்சல சிவ . அருணாச்சல சிவ . அருணாச்சலா