Blessed Moments with Mahaswamigal
Sri Chitaranjan, a long time devotee of Mahaswamigal of Kanchi, remembers memorable moments when he was in His company.
RANJAN RECALLS HIS SACRED MOMENTS WITH
MAHASWAMIGAL
My maternal uncle Nagai Soundararaj in Cuddalore used to be close to the mutt
and sometimes I accompanied him on his pilgrimages. Once, on a fine day in
seventies, he took me to Kanchi mutt. At that time, I did not have a good
opinion about saints and sages. So I just accepted as usual the pant and shirt
that he deposited with me before changing himself to dhoti and towel and waited
in a corner, when he went to have a darshan of Mahaswamigal. That day, however,
I was inquisitive about seeing the swamigal at close quarters. When I saw him, I forgot
myself and prostrated before him. He wanted to know my name and when I said `Chittaranjan', he asked what was meant by it. I did not know it and he explained, `It is Chitta and Ranjan or one who keeps his mind clean and beautiful'. Soon I was myself visiting the mutt whenever
I chanced to get past Kanchipuram.
I was good at sketching and painting whatever attracted me
then. I used to show some of my good drawings to Mahaswamigal and he used to
appreciate them. He encouraged me, saying my eyes reflected the creative urge
in me. Soon I started taking snaps of him, as photography was my another hobby
then. On a particular Shasti day, I went to mutt to have his snap. Mahaswamigal
was interacting with the crowd of devotees when I went for a snap of him,
without his approval. He heard the camera click noise, turned to me and
signaled to me to stop. I sort of ignored his instruction and went on clicking.
Afterwards, upon developing the role, I was shocked to find that it was a wash
out.
On a Thursday, I again went to see him but this time
preferred to stay back and simply observe him and the crowd of devotees.
Swamigal was fasting and was on mouna vratham. He retired to his room sooner
than expected and I was disappointed. Still I waited outside the room, not
willing to move. Time was ticking away but I stayed still between 8 AM and 1.30 PM. Surprisingly, he reappeared, sat in his usual
place and this time signaled to me to take photos. I filled my role with his
various photos, some 32 of them. My camera was an ordinary Rs 1000 camera but
the frames, when developed, were full of life. All his photos were perfect and
had a professional touch. Sri Savi Viswanathan heard about the photos and
contacted me. He said his son Batcha had a camera worth Rs 30,000 and still did
not have the clarity and details my snaps of Swamigal had and immediately
arranged to have them in a cover story in the Pongal issue of Saavi, his
Tamil weekly journal. (A scanned copy of the matter which appeared in the 20th Jan 1985 issue of Saavi can be seen along with this matter.)
I had the habit of wearing new set of dresses for Deepavali
only after showing them to Mahaswamigal for some years when I was a bacherlor.
I went to have his darshan, on a Deepavali eve, on one such occasion. It was pouring
cats and dogs and the Mahaswamigal was then camping at some place in Andhra. When
I went to have his darshan, it was 5 AM on the day of Deepavali. Seerkazhi
Govindarajan was singing in the presence of Mahaswamigal. Smt M S Subbulakshmi
and her husband Sri Sadasivam had also come to have his darshan. Seerkazhi’s
song was followed by that of MS Amma. Valayapatti thavil vidwan was also there.
Only 5 of us were there then. It was a memorable Deepavali for me, in the
company of Mahaswamigal, MS, Seerkazhi and Valayapatti.
I would like to narrate another incident which happened
after the siddhi of Mahaswamigal. I heard about Swamigal’ siddhi and rushed to
Kanchipuram to have his darshan before he was to be interned in Januray 1994.
There was a huge crowd and the solemn atmosphere also had some commotion. Some
of us volunteered to control the crowd. The task went on till his body was
interned. When I came out of the mutt, it was around midnight and there were no
buses in the direction of Chennai. One hefty gentleman, who also volunteered in
regulating the crowd, offered me a lift to Chennai. At the time of dropping me on
Poonamalle High Road, he gave me his visiting card as a friendly gesture. Only
on reaching home, I looked at the card and was stunned to find that it was none
other than Sri T N Seshan, the Chief Election Commissioner! Mahaswamigal helped
me in my safe passage to Chennai after he quit his body! Miraculously true!
அந்த வயதில் எனக்கு சித்திரம் வரைவதில் மிகுந்த ஈடுபாடு. கூடவே புகைப்படம் எடுக்கும் ஆர்வமும் தொத்திக் கொண்டது. பெரியவரைப் பார்க்கும் போதெல்லாம் என் படங்களை அவரிடம் காட்டுவேன். அவரும் பாராட்டு தெரிவிப்பார். `இவன் கண்களில் ஒரு ஒளி தென்படுகிறது. இவன் நல்ல படைப்பாளியாக வருவான்' என்று மற்றவர்களிடம் சொல்லுவார். நானும் வரைந்ததைக் காட்டுவதும் அவர் சன்னதியில் புகைப்படம் எடுப்பதுமாக இருந்தேன்.
ஒரு சஷ்டி நாள். அவர் விரதம் இருந்து மௌனமும் அனுஷ்டிக்கும் தினம். அன்று அவர் சன்னதியில் ஆர்வம் மிகுதியால் அவர் உத்தரவு இல்லாமலே புகைப்படம் எடுக்க ஆரம்பித்தேன். காமெராவின் க்ளிக் சப்தம் கேட்டுத் திரும்பியவர் என்னைப் பார்த்து `வேண்டாம்' என்பது போல் சைகை செய்தார். நான் அதைப் பார்க்காதது போல் படம் எடுத்துக் கொண்டே இருந்தேன். பின்னர் அந்த ரோலை கழுவிப் பார்த்த போது ஒரு படம் கூடப் பதிவாகவில்லை. அவர் அனுமதி இல்லாமல் படம் எடுத்ததற்கு நல்ல பாடம் கற்றுக் கொண்டேன்.
இன்னொரு நாள். குரு வாரம். பெரியவரைப் பார்க்கச் சென்ற போது அவர் வழக்கத்தை விட சீக்கிரமாக உள்ளே சென்று விட்டார். இனி அவர் அன்று தரிசனம் தர மாட்டார் என்று சொன்னார்கள். நான் வெறும் கையுடன் கிளம்ப மனம் இன்றி அங்கேயே காத்திருந்தேன். என் அதிர்ஷ்டம் சிறிது நேரம் சென்ற பிறகு அவர் மறுபடி வெளியே வந்து தாம் வழக்கமாக அமரும் இடத்தில் அமர்ந்தார். இந்த முறை அவராகவே என்னைப் பார்த்து `படம் எடுக்கலாம்' என்று சமிக்ஞை செய்தார். அவ்வளவுதான். பல்வேறு கோணங்களில் அந்த தெய்வ மகனைப் படம் எடுத்தேன். 32 படங்களையும் அவரை வைத்தே ரொப்பினேன். ரோலை டெவெலப் செய்த போது அத்தனைப் படங்களும் கண்ணில் ஒற்றிக் கொள்ளும்படி தத்ரூபமாக வந்திருந்தன. இந்த விஷயம் கேள்விப்பட்டு `சாவி' இதழ் ஆசிரியர் சா.விஸ்வநாதன் என்னுடன் தொடர்பு கொண்டார். `என் மகன் 30,000 ரூபாய் காமெராவில் படம் எடுத்ததை விட நீ 1000 ரூபா காமெராவில் எடுத்த படங்கள் நன்றாக வந்திருக்கின்றன' என்று சொல்லி அவற்றை வைத்து ஒரு பொங்கல் இதழ் கவர் ஸ்டோரி செய்தார். (20-1-85 இதழ்).
அப்போதெல்லாம் என் தீபாவளி புத்தாடையைப் பெரியவரிடம் காண்பித்து அவரைச் சேவித்த பிறகு தான் காட்டுவேன். அது மாதிரி ஒரு தீபாவளிக்கு முந்தைய நாள் அவரைத் தேடிச் சென்றேன். அவர் அப்போது ஆந்திரா சென்றிருந்தார். நானும் கொட்டும் மழையில் அங்கே சென்றேன். தீபாவளி அன்று காலை ஐந்து மணி சுமார் இருக்கும். வழியில் கணீரென்று பாடல் குரல் கேட்டது. அந்த திசை நோக்கி நகர்ந்தேன். மஹா சுவாமிகள் முன்னிலையில் சீர்காழி கோவிந்தராஜன் தம்மை மறந்து பாடிக் கொண்டிருந்தார். பக்கத்தில் திருமதி MS, சதாசிவம் மற்றும் வளையபட்டி தவில் வித்வான் ஆகியோரும் இருந்தார்கள்.
தாம் வாங்கிய ஒரு விருதைப் பெரியவரிடம் காண்பித்து MS அம்மா ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பிறகு அம்மா அவர்களும் தம் குரலில் தேனைக் குழைத்துப் பாடினார்கள். ஒரு தீபாவளி புண்ணிய நாளில் ஒரு புண்ணிய புருஷனை அவ்வளவு நெருக்கத்தில் பார்த்தது மறக்க முடியாத நிகழ்ச்சி.
கடைசியாக ஜனவரி 1994 மாதத்திற்கு வருவோம். அன்று பெரியவர் ஸித்தி அடைந்துவிட்டார் என்று கேள்விப்பட்டு உடனே காஞ்சீபுரம் கிளம்பினேன். நல்ல கூட்டம். பக்தர்கள் ஆர்வம் மிகுதியால் கட்டுப்பாடு இன்றி இங்கும் அங்கும் கூட்டம் போட்டு நெரிசலை உண்டாக்கியதால் நானும் சிலரும் அவர்களை நெறிப்படுத்த முற்பட்டோம். இந்த வேலை மறு நாள் இரவு பெரியவர் வேலைகள் முடியும் வரை தொடர்ந்தது. ஒரு வழியாகக் கூட்டம் குறைந்த பிறகு ஊருக்குக் கிளம்பலாம் என்று பார்த்தால் அது கிட்டத்தட்ட நடு நிசி. ஒரு பஸ்ஸும் சென்னை ரூட்டில் இல்லை. அந்த நேரம் அவ்வளவு நேரம் என்னுடன் தொண்டன் வேலை செய்த ஒரு மனிதர் தம் காரை என் பக்கம் நிறுத்தி `எங்கே சென்னையா? என்னுடன் வாருங்கள். நானும் அங்கே தான் போகிறேன்' என்று சொல்லி என்னை ஏற்றிக் கொண்டார். பூந்தமல்லி சாலையில் நான் இறங்கும் இடம் வந்ததும் என்னை இறக்கி விட்டுத் தன் விசிட்டிங் கார்டையும் என்னிடம் தந்தார். வீட்டிற்கு வந்து அந்தக் கார்டைப் பார்த்ததும் திக்கென்றது. அந்த மனிதர் முதன்மைத் தேர்தல் அதிகாரி T N சேஷன். தான் ஸித்தியடைந்த பிறகும் அந்த மஹான் என்னைக் கைவிடாமல் என்னை பத்திரமாக வீடு சேர்த்தார். மஹாசுவாமிகளின் பெருமையே பெருமை.
பின் குறிப்பு: ஸ்ரீ ரஞ்சன் தான் நேரில் பார்த்ததாகச் சொன்ன ஒரு சம்பவம்: ஒரு பையன் மஹா பெரியவளைப் பார்க்க வந்திருந்தான். அவரைச் சேவிக்கும் போது திடீரென்று விக்கி விக்கி அழுதான். கேட்டதற்குத் தான் மிகவும் ஏழைப்பட்டக் குடும்பத்தைச் சார்ந்தவன் என்றும் தான் அக்காவின் திருமணம் பொருள் இல்லாததால் தள்ளிப் போய்க்கொண்டிருப்பதாகவும் சொன்னான். பெரியவர் அவனிடம் தெலுங்கில் ஏதோ வினவ அவனும் ஒரு ஓரம் சென்று `கனகதாரா ஸ்தோத்திரம்' சொல்ல ஆரம்பித்தான். சற்று நேரத்தில் ஒரு பணக்காரத் தோற்றமளிக்கும் மனிதர் தட்டு நிறைய ரூபாய் நோட்டுகள் காணிக்கையாக வைத்து பெரியவாளை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார். அதில் இன்னொரு ஆச்சரியமாக நோட்டுக் கட்டுகளின் மேல் ஒரு கனமான புத்தம் புது தாலியையும் வைத்திருந்தார். பெரியவர் கை அசைக்க, அந்தத் தட்டு அப்படியே அந்தப் பையனுக்குச் சென்றது.
Some of the Periyava pictures shot by Shri Ranjan:
Sridhar Chaama
Jan 1985 Pongal issue of Saavi carried the photo and matter. |
Bala Periyava caught in a meditative mood |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக