A DAY IN THE LIFE OF BHAGAVAN RAMANA (His 142nd Jayanthi was on 21-12-21)
வியாழன், 23 டிசம்பர், 2021
சனி, 4 டிசம்பர், 2021
A sloka from Narayaneeyam often cited by Mahaswamigal to get rid of diseases.
https://www.trinethram-divine.com/2012/08/narayneeya-stotram-to-get-rid-of-any.html?m=0
சனி, 20 நவம்பர், 2021
வெள்ளி, 6 ஆகஸ்ட், 2021
PERIVA IN SRI SANKARA SARITHAM
உபகாரப் பணியிலும் அபகாரம்!
ஊர்
ஸமாசாரமெல்லாம் சொன்னேன். ஸொந்த ஸமாசாரமாக இரண்டு சொல்கிறேன் :
ஒரு ஊரில்
(ஸ்ரீமடத்தின் ஆதரவில்) அன்னதானம் செய்தது. ரொம்பப் பேர், ஏழைகள், வயிறாரச்
சாப்பிட்டு விட்டு, மனஸ் குளிர்ந்து
வாழ்த்திக்கொண்டு போனார்கள். (சமையல் வகைகள்) எல்லாம் நிறையப் பண்ணியிருந்தும்,
மூட்டை அரிசி வடித்திருந்தும், கொஞ்சங்கூட பாக்கியில்லாமல் எல்லாம் ஜனங்கள்
வயிற்றுக்குப் போச்சே என்று ரொம்ப த்ருப்தியாக இருந்தது. த்ருப்தி என்றால் என்ன?
‘நாமாக்கும்
பண்ணிவிட்டோம்’ என்ற ‘ஈகோ’தான்!
பாத்ரம், பண்டம் எல்லாம் தேய்த்து, அடுத்த ஊருக்குக் கிளம்பத் தயாராக இருந்த
ஸமயம். அப்போது ஒரு பத்துப் பதினைந்து ஏழை ஜனங்கள் — ஸ்தீரிகள், குழந்தைகள் உள்பட — லொங்கு லொங்கு என்று
ஓடிவந்து, “சோறு, சோறு” என்று கேட்க ஆரம்பித்ததுகள். எட்டு,
பத்து மைல் தாண்டி எங்கேயோ இருக்கிறவர்கள்.
அன்னதான ஸமாசாரம் அவர்கள் காதுக்கு லேட்டாகத்தான் போயிருக்கிறது. உடனே, பாவம், வெய்யிலில் அத்தனாம் தூரம் ஓடி வந்திருக்கிறதுகள்! இங்கேயானால் பருக்கை சாதம்
இல்லை! அண்டா, குண்டான் எல்லாம்
வண்டியிலே ஏற்றிக் கொண்டிருக்கிறது! அப்போது அவர்களுக்கு உண்டான ஏமாற்றத்தைச்
சொல்லிமுடியாது.
ஆயிரம்
பேருக்குப் போட்டு ஏதோ நாம் ப்ரமாத உபகாரம் பண்ணிவிட்டோமாக்கும் என்று
த்ருப்திப்பட்டது அத்தனையும் இந்தப் பத்துப் பதினைந்து பேருக்குப் பண்ணிய
அபகாரத்தில் ஓடியே போய்விட்டாற்போலிருந்தது!
ஏதோ பழம்,
கிழம் கொடுத்து, சில்லறை கொடுத்து, அவர்களை ஸமாதானம் பண்ணி அனுப்பிவைத்தது. அவர்கள் ஸமாதானமானார்களோ இல்லையோ,
இங்கே (தம்மையே குறிப்பிட்டு)
ஸமாதானமாகவில்லை!’ பாவம்! வயிறார நல்ல சாப்பாடு கிடைக்குமென்று இந்தப் படைபதைக்கிற
வெய்யிலில் இத்தனாம் தூரம் ஓடிவந்து குஞ்சும் குழந்தையும் பெண்களுமாக ஏமாந்து
போச்சுகளே!’ என்று தானிருந்தது!’ ஆயிரம் பேர் சாப்பிட்டுவிட்டும் போனார்களே
என்றால், நேற்றுவரைக்கும்
அவர்களுக்கு நாமா போட்டோம்? நாளைக்கு நாமா
போடப்போகிறோம்? அதே மாதிரி
இன்றைக்கும் அவர்கள் எப்படியோ வயிற்றைக் கழுவிக் கொண்டிருப்பார்கள். ஆனால்,
‘போடுகிறோம்’ என்று நாம்
அக்ஷதை போட்டுக்கொண்டு கிளம்பினதால் தானே இந்தப் பத்துப் பதினைந்து பேர்
வழக்கமாகத் தாங்கள் இருக்கிற இடத்தில் காய்ச்சிக் குடிப்பதை, அல்லது பிச்சை எடுத்துத் தின்னுவதை
விட்டுவிட்டுப் பசியும் பட்டினியுமாய் வெய்யிலில் இத்தனாம் தூரம் ஓடிவந்து ஏமாந்து
போகும்படி நேர்ந்திருப்பது? ஆக, கூட்டல், கழித்தல் பார்த்தால், உபகாரம் பெரிசா, அபகாரம் பெரிசா? ‘என்று
தோன்றிற்று.
தானத்திலெல்லாம்
உசந்ததாகச் சொல்லப்படும் அன்னதானத்தில்கூட இப்படி நல்லதோடு கஷ்டமும் கலந்து
வருகிறது!
எதற்குச்
சொல்கிறேனென்றால்: நாம் ஒருத்தனுக்கு உபகாரம் பண்ணுவதே நேராக இன்னொருத்தனுக்கு
அபகாரமாக ஆகாதபோதுகூட, எப்படியோ சுற்றி
வளைத்துக்கொண்டு போய் யாருக்கோ கஷ்டம் கொடுத்து, அதோடு, ‘உபகாரம்
செய்கிறேன்’ என்று அக்ஷதை போட்டுக்கொண்டு கிளம்பின நாமும் மனஸ்
வருத்தப்படும்படியாகலாம் என்று காட்டுவதற்குத்தான்!
அதாவது, எந்த உபகாரமானாலும் அத்தனை ஜனங்களுக்கும் செய்ய
எவருக்கும் ஸாத்யமில்லை. எவராவது நம்முடைய உபகாரத்தை எதிர்பார்த்து ஏமாந்து
மனமொடிந்து போகும்படியாகவும்தான் ஆகிறது. கோடீச்வரனானால்கூட ஸத்கார்யங்களுக்கு
அவன் கொடுக்க ஆரம்பிக்கும்போது புற்றீசல் மாதிரி (நன்கொடை) கேட்டுக் கொண்டு பலபேர்
வருகிறபோது, ஏதோ ஒரு இடத்தில்
அவன் ‘இல்லை, போ’ என்று கையை
விரிக்கும்படியாகிறது. இவன் (புதிதாக வருபவன்) கேட்கிற cause உசந்ததாகத் தான் இருக்கிறது. இவனுக்கு முன்னாடி
யாரோ மோசக்காரர்கள்கூட ஏமாற்றி வாங்கிப் போயிருக்கிறார்கள். ஆனாலும் இவனுக்குக்
கொடுப்பதற்கில்லாமல் ஏமாற்றத்தோடு அனுப்பிவைக்க நேருகிறது.
ஆஸ்பத்திரி,
ஸ்கூல் என்று வைக்கும்போது, ‘Bed இல்லை;’ ஸீட் இல்லை’என்று சொல்லி, ரொம்பவும் நோயாளியாக உள்ள ஒருவனை, நல்ல புத்திசாலியான குழந்தை ஒன்றை ஏமாற்றி, மனஸை வருத்தித் திருப்பியனுப்பும்படியாகவும்
ஏற்படுகிறது.
ஒரு உயிரைக்
காப்பாற்றுவது எத்தனை உத்தமமான கார்யமாகத் தெரிகிறது? அதிலேகூடக் கெடுதல் வருகிறது!
ஸொந்த ஸமாசாரத்தில்
இன்னொன்று சொல்கிறேன்:
ஒரு ஊரிலே
நாங்கள் முகாம் போட்டிருந்த ஜாகை ரொம்ப பழைய நாள் கட்டிடமாக இருந்தது. ஓட்டுக்
கட்டிடம். நடுவிலே முற்றம். கட்டிடக் கூரையின் உத்தரம் அநேகமாக
உளுத்துப்போயிருந்தது. அதிலே, ‘விர்ர்’
‘விர்ர்’என்று சத்தத்துடன் பறக்கிற பெரிய வண்டுகள் துளை போட்டுக்கொண்டு வாஸம்
பண்ணிக்கொண்டிருந்தன. அவை அப்பப்போ முற்றத்திலே வந்து விழுந்து புரளும். இப்படி
ஒரு வண்டு குப்புற விழுந்தபின் அதனால் மறுபடி நேராக நிமிர்ந்து புரள முடியவில்லை.
எப்படியாவது புரண்டு பறந்து போய்விடணுமென்று அது காலை உதைத்துக் கொண்டு ரொம்ப
ப்ரயத்தனம் பண்ணியும், முடியவில்லை.
அப்போது-அந்த முற்றத்திலே சாரி சாரியாகக் சுட்டெறும்புகள் போய்க் கொண்டிருந்தன.
அதுகள் இந்த வண்டு இப்படி வயிறு மேலேயும் முதுகு கீழேயுமாக ஒன்றும் பண்ணிக்கொள்ள
முடியாமல் காலை உதைத்துக்கொண்டு கிடப்பதைப் பார்த்ததும், இதுதான் ஸமயம் என்று அதனிடம் வந்து மொய்த்துக்கொண்டு
‘வெடுக்கு’ ‘வெடுக்கு’ என்று அதன் கால்களைப் பிய்ப்பதற்காகக் கடிக்க ஆரம்பித்தன.
வண்டு ஸஹிக்கமுடியாமல் அவஸ்தைப்படுவது தெரிந்தது. பார்க்கப் பரிதாபமாக இருந்தது.
வண்டைப் புரட்டி
ஒரே நேரே போட்டால் அது பறந்து போகுமே, ஒரு உயிர் பிழைத்துப் போகுமே என்று நினைத்தேன்.
அப்படியே வண்டைப்
புரட்டிப் போட்டது.
ஆனால் என்ன
நடந்ததென்றால், அது தன் உயிர்
தப்பினால் போதுமென்று உத்தரத்துத் துளைக்குப் பறந்து போய்விடவில்லை.
என்ன பண்ணிற்று
என்றால், பழி தீர்த்துக்கொள்கிற
மாதிரி அந்த எறும்புகளையெல்லாம் பிடித்து ‘லபக்’ ‘லபக்’ என்று தின்ன
ஆரம்பித்துவிட்டது!
ஒரு உயிருக்கு
உபகாரம் பண்ணப் போன லக்ஷணம் இத்தனை உயிர்களுக்கு அபகாரமாக முடிந்தது! ‘நாம் ஏதோ
ஒரு ப்ராணியைக் காப்பாற்றி நல்லது பண்ணி விட்டோமாக்கும்’ என்ற ‘ஈகோ’வுக்கு ஒரு அடி
போட்ட மாதிரி, பல ப்ராணி
வதைக்குக் காரணமாகும்படியாயிற்று.
ஸாதுவான ஒரு
மானைப் புலியிடமிருந்து காப்பாற்றினால்கூட, அந்தப் புலிக்கு சாகபக்ஷணம் (மரக்கறி போஜனம்)
செய்யமுடியாதபடி ஈச்வரனே வைத்திருப்பதால், மானுக்குச் செய்யும் உபகாரம் புலியைப் பட்டினி போட்டுக் கஷ்டப்படுத்துவதாக
ஆகிறது! அதுவும் ஒரு உயிர்தானே? அது வேண்டுமென்றா
தன்னைத் தானே துஷ்ட ப்ராணியாகப் படைத்துக் கொண்டிருக்கிறது? இது ஒரு பக்கம்.
இன்னொரு பக்கம்,
மஹா துஷ்டனாக, லோக கண்டகனாக இருக்கிற ஒரு ராவணனை பகவானே அவதாரம் பண்ணிக்
கொல்கிறானென்றால்கூட அப்போது பரம ஸாத்வியாக, உத்தமியாக இருக்கப்பட்ட ஒரு மண்டோதரியின் மாங்கல்யத்தைப்
பறித்து அவளைக் கதறக் கதற அடிப்பதாக இருக்கிறது.
வெள்ளி, 29 ஜனவரி, 2021
Bhagavan was a very beautiful person; he shone with a visible light of aura. He had the most delicate hands I have ever seen with which alone he could express himself, one might almost say talk. His features were regular and the wonder of his eyes was famous. His forehead was high and the dome of his head the highest I have ever seen.
Bhagavan always radiated tremendous peace, but on those occasions when crowds were attracted to the Ashram such as Jayanthi, Mahapooja, Deepam and such functions, this increased to an extraordinary degree. The numbers seemed to call up some reserve of hidden force, and it was a great experience to sit with him at such times.
His eyes took on a far-away look and he sat absolutely still as if unconscious of his surroundings, except for an occasional smile of recognition as some old devotee prostrated.
- A. W. Chadwick, A Sadhu's Reminiscences of Ramana Maharshi.
வியாழன், 14 ஜனவரி, 2021
புதன், 30 டிசம்பர், 2020
ஞாயிறு, 27 செப்டம்பர், 2020
சமீபத்தில் மறைந்த பாடகர் எஸ் பி பி குடும்பத்தை காஞ்சி பெரியவர்கள் காப்பாற்றிய அதிசயம்
(எஸ் பி பியின் சகோதரி எஸ் பி ஷைலஜா ஸ்ரீ கணேஷ் சர்மாவின் ஒரு புத்தக முன்னுரையில் சொன்னது.)
புதன், 23 செப்டம்பர், 2020
ஹரியோ சிவகுருவோ வரருசியோ யதிவரனோ
பகவான்
ஸ்ரீ ரமணரை விருபாக்ஷி குகையில் வந்து தரிசித்தவர் அமிர்தானந்த யதீந்திரர்.
இவர் கேரளாவில் உள்ள
ஆல்வாய் என்னும் இடத்தில் பிறந்து நாராயண நம்பூதிரி என்னும் பூர்வாசிரம பெயர் கொண்டவர். எல்லோராலும் அமிர்தானந்தர் என்று குறிப்பிடப் பட்டார். ஸ்ரீ பகவானிடம் மிகுந்த
ஈடுபாடு உள்ளவர்.
ஒரு நாள் விருபாக்ஷியில்
ஸ்ரீ பகவான் பேரில் ஏற்பட்ட பக்தி பரவசத்தில்----யாரோ இந்த அருணாசல
ரமணன் ? சிவனோ ! விஷ்ணுவோ ! குகன் றானோ ! மற்றெந்த தேவனோ தெரியவில்லையே ! ----என்ற கருத்தில் ஓர்
மலையாள விருத்தம் எழுதி ஸ்ரீ பகவான் வெளியில்
சென்றிருந்த சமயம் அவர்கள் அமரும் இருக்கையின் மீது வைத்து விட்டார்.
ஸ்ரீ பகவான் வந்து
அமரும்போது அந்த சீட்டினைக் கண்டு
எடுத்து படித்துப் பார்த்தார்கள். உடனே அந்த காகிதத்தின்
பின்பக்கத்திலேயே அதே மலையாள விருத்தத்தில்
பதில் எழுதிக் கொடுத்தார்கள்.
அமிர்தானந்தர்
:----
அருணாசல
சிகரோபரி விருதார்னொரு குகையில்
கருணாகர
விருதாவலி பகவான்முனி ரமணன்
ஹரியோசிவ
குருவோவர ருசியோ யதிவரனோ
அரிவானுரு
குதுகம்மம ஹ்ருதயேகுரு மஹிமா
ஸ்ரீ
பகவான் :----
ஹரியாதிய
பரஜீவரத ஹரநீரஜ குகையில்
அறிவாய்ரமி
பரமாத்மனெ அருணாசல ரமணன்
பரமாதர
பரனாய்ஹ்ருதி பரனார்னுரு குகையார்ந்
நறிவாம்விழி
துறநீநிஜ மறிவாயது வெளியாம்.
ஸ்ரீ பகவான் தான்
அருளிய மேற்படி மலையாள விருத்தத்தை தமிழிலும் மொழிபெயர்த்து அருளினார்கள்.
அந்த
பாடல் :----
அரியாதியி
தரசீவர தகவாரிச குகையில்
அறிவாய்ரமி
பரமாத்துமன் அருணாசல ரமணன்
பரிவாலுள
முருகாநல பரனார்ந்திடு குகையார்ந்து
அறிவாம்
விழி திறவாய்நிச மறிவாயது வெளியாம்.
இந்த பாடல் ஸ்ரீ
அருணாசல ஸ்துதி பஞ்சகத்தில் தனி விருத்தமாகச் சேர்க்கப்
பட்டுள்ளது.
ஸ்ரீ குஞ்சு சுவாமிகள்
எழுதியுள்ள --
எனது
நினைவுகள் -- என்ற நூலில் இந்த
விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
புதன், 2 செப்டம்பர், 2020
Courtesy: The sage of Kanchi
ஜீவன்
முக்தர்களின் சன்னிதி விசேஷம்
BY GANAPATHY SUBRAMANIAN on AUGUST 26, 2020 • ( 4 )
கீழ்க்கண்ட
அனுபவங்கள் மகா பெரியவா, சிவன்
சார், கோவிந்த தாமோதர ஸ்வாமிகளின் சன்னிதியிலும் ஏற்பட்டதை அவர்களுடைய பக்தர்கள் வாயிலாக நாம் கேட்டிருக்கிறோம். ஜீவன் முக்தர்களுடைய
சன்னிதி விசேஷம் அது.
என்.
பலராம ரெட்டி
இவரைப்
பற்றி: பலராம ரெட்டி, M.A (1908-95), ஆந்திரபிரதேசத்தின் ஆன்மிக சூழலுள்ள ஒரு கிராமத்தில் வளர்ந்தார்.
1931ல் ஸ்ரீ அரபிந்தோ ஆஸ்ரமம்
சென்ற இவர் 1937ல் ஸ்ரீ ரமணரின்
பக்தராக ஆனார். My Reminiscences என்ற புத்தகம் ஸ்ரீரமணாஸ்ரமத்தில்
இவரது வாழ்வு மற்றும் சாதனை ஆகியவைப் பற்றி விளக்குகிறது.
ஸ்ரீபகவானின்
அவதாரம் இந்தப் பூமியை ஆசீர்வதிப்பதற்காக நிகழ்ந்தது. “அவரது கால்தடம் பட்டதும் பூமி தான் ஆசீர்வதிக்கப்பட்டதை
உணர்ந்தாள்” என்று
பாகவதத்தில் ஒரு வரி வரும்.
என்னைப் பொருத்தவரையில் இந்த பூமிக்கு விஜயம்
செய்த அற்புதமான பிறவிகளில் பகவான் ஒருவர். அவருடன் சேர்ந்து வசிக்கும் போது பூர்வ ஜென்மத்தில்
நாம் செய்த புண்ணியத்தினால்தான் இப்பிறவியில் பகவானின் சேர்க்கை கிடைத்திருக்கிறது என்பதை உணரலாம். அவருடன் இருப்பது என்பது ஆகாயத்தில் இருப்பது போன்றது. அவருடன் பேச வேண்டாம். பேசி
அவரிடமிருந்து எதையும் தெரிந்து கொள்ள முயலவேண்டாம். சூரியக் கதிர்கள் போல நிறுத்தாமல் அவர்
அருள்மழை பொழிந்துகொண்டிருந்தார். இப்போது கூட உங்கள் பிரார்த்தனைகளுக்கு
அவர் செவிசாய்ப்பார். உங்கள் பிரார்த்தனை உண்மையாக இருக்கும் பட்சத்தில்.
பகவான்
தன்னுடைய அன்பினால் எப்படி எல்லோரையும் கட்டிப்போட்டிருந்தார் என்பதை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. பகவானுக்கும் அவரது நெடுங்கால பக்தர்களுக்குமிடையே வார்த்தைகள் பரிமாற்றம் இருக்காது. இருந்தாலும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமான இப்பக்தர்கள் பகவானின் அருள் தங்கள் மீது பொழிவதை தெரிந்திருந்தார்கள்.
ஒற்றைப் பார்வையில், ஒரு தலை அசைப்பில்,
சின்ன விசாரணையில் பகவான் நம் மீது அக்கறையாக
இருக்கிறார் என்று நேரடியாக இல்லையென்றாலும் இரண்டாமவர் மூலமாகவாவது ஒரு பக்தர் உணர்ந்துகொள்வார்.
அவரது முன்னிலையில் எல்லா ஏற்றத்தாழ்வுகளும் வித்யாசங்களும் தீர்க்கப்பட்டன.
பகவான்
மிகவும் அனுகூலமானவர். அன்பிதயம் கொண்டவர். ஒவ்வொருவர் கண்களுக்கு அவர் ஒவ்வொரு விதமாக
தெரிந்தாலும் தேடுபவர்களின் மீது தனிக் கவனம்
எடுத்துக்கொண்டார். பகவானின் உதவியைப் பலமுறை பெற்றவன் நான்.
என்னுடைய
குடும்பத்தின் நிலவிய ஒரு அசாதாரண சூழ்நிலையில்
என்னுடைய கிராமத்திலேயே நான் எப்போதும் இருக்கவேண்டிய
கட்டாயம் ஏற்பட்டது. அதாவது பகவானைவிட்டு நான் விலக வேண்டும்.
எனக்கு அந்தச் செய்தி வந்தவுடன் நான் நேரே பகவானிடம்
சென்று நமஸ்கரித்து விவரத்தைச் சொன்னேன். கேட்டுக்கொண்ட பகவான் தலையை ஆட்டினார். அந்த தலை அசைப்பிற்கான
அர்த்தம் என்னுடைய அம்மாவிடமிருந்த வந்த கடிதத்தைப் பார்த்ததும்தான்
புரிந்தது. அந்தக் கடிதத்தில் என் அம்மா தானே
அந்த விஷயங்களைப் பார்த்துக்கொள்வதாகவும் பகவானை விட்டு நான் பிரியவேண்டாம் என்றும்
எழுதியிருந்தார். என்னுடைய் உலகவாழ்க்கையில் இது ஒரு திருப்புமுனை.
இது சந்தேகத்திற்கே இடமில்லாமல் பகவானின் நேரடி அருளினால் கிடைத்தது.
நான்
திருவண்ணாமலைக்கு ஜாகை மாற்றியிருந்த வருஷம்
அறையில் நான் உட்கார்ந்திருக்க பகவான்
ஒரு குறிப்பிட்ட ஆன்மிக செய்தியை என்னிடம் விளக்கிக்கொண்டிருந்தார். அந்தப் பேச்சின் இடையில் பகவான் அறையில் இருந்த அலமாரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து
வரச் சொன்னார். அந்தப் புத்தகத்தை அலமாரியில் கண்டுபிடிக்க முடியாமல் மீண்டும் பகவான் எதிரே வந்து அவர் முகத்தைப் பார்த்து
அமர்ந்துகொண்டேன். பகவான் எழுந்தார். கம்பீரமாக அந்த அலமாரியை நோக்கி
மெதுவாக நடந்து சென்று ஒரே கணத்தில் அந்தப்
புத்தகத்தை எடுத்தார். அலமாரியை மூடிவிட்டு நடந்து வந்த அவர் என்னை
ஆச்சரியப்படுத்தும்படி தனது இருக்கையில் அமராமல்
என் பக்கத்தில் வந்துத் தரையில் என்னோடு உட்கார்ந்துகொண்டார்.
fvgஅfdந்bதxப்
புத்தகத்தைப் பிரித்து என் முகத்துக்கு நேரே
காட்டி ஒரு குறிப்பிட்ட பத்
தியைப் படிக்கச்
சொன்னார். பகவானின் உதவியாளர்கள் அவரது சரீரம் அடுப்பு போலக் கொதிக்கும் என்பார்கள். என் பக்கத்தில் அவர்
அமர்ந்தபோதுதான் என்னால் அதை உணர முடிந்தது.
மின்சார டைனமோ போல அவரிடமிருந்து ஆன்மிக
சக்தி பெருகுவதை உணர்ந்தேன். நான் அப்படியே ஆச்சரியத்தில்
உறைந்துபோனேன்.
சத்தியமானது
பகவானது இருத்தலில் உறைந்து போய் அவர் நம்
முன்னிலையில் இருக்கும் போது நமக்குள் அதிரடியான
மாற்றத்தை உண்டுபண்ணுகிறது. அவரது தெய்வீக சக்தியானது அபாரமானது.
பகவானின்
அறையில் குறிப்பிடத்தக்க ஏதோ ஒன்று இருப்பதாக
எனக்கு எப்பவுமே உள்ளுணர்வில் இருக்கும். அறைக்குள் நாம் நடந்து சென்று
அவர் முன்னால் அமரும் போது நம்முடைய இருத்தலின்
வேறு ஒரு வித்தியாசமான பரிமாணத்தை
அடைந்ததாக உணர்வோம். நமக்குத் தெரிந்த உலகம் மறைந்து போய் பகவானின் முன்னிலையில்
அவரது உலகம் அந்தச் சூழலை மூடிக்கொள்ளும். அந்த அறையை விட்டு
வெளியேறிய பின்னர் மீண்டும் நமக்குத் தெரிந்த அந்த பழைய உலகத்தில்
சஞ்சரிப்பதை உணர்வோம்.
நிஜத்தில்
எப்போதும் சுயத்தில் விழித்திருந்தாலும் பொதுவாக பகவான் தூங்குகிறாரா விழித்திருக்கிறாரா என்று சொல்ல முடியாது. அவர் எப்படி இந்த
தடையற்ற பிரபஞ்ச விழிப்புணர்வில் இருந்துகொண்டு இந்த எல்லைக்குட்பட்ட ஸ்தூல
சரீரத்துடன் செயல்பட்டார் என்பதே ஒரு மிகப்பெரிய ஆச்சரியம்.
அந்த நிலை நமக்குப் புரியாது.
அந்த மகோன்னதமான நிலையிலிருந்து நம் நிலைக்கு இறங்கி
வந்து நம்மோடு பேசிக்கொண்டிருந்தார். ஆஸ்ரமத்தின் செயல்பாடுகளுக்கும் பார்வையாளர்களின் தங்கும் வசதிக்கும் கூட கனிசமான அளவில்
செயல்பட்டார்.
அவரது
செயல்கள் இயற்கையாகவும் சரளமாகவும் இருக்கும். அவரைப் பார்த்தே நாம் இவ்வுலகத்தில் எப்படி
வாழ்வு என்று அறிந்துகொண்டோம். அவரது உதாரணங்களே பெரும் போதனை அவரது தெய்வீக இருத்தலே நாம் வாழ்நாள் முழுவதும்
கடும் முயற்சியோடு செய்த சாதனைகள் தரும் பலன்களைக் காட்டிலும் பெரிதாக இருக்கும். அவரைப் பற்றி சிந்தித்தாலோ அல்லது அவர் முன்னால் வெறுமேனெ
அமர்ந்தாலோ அதுவே நம்மை சிறப்பாக ஆசீர்வதிக்கப்பட்ட நிலைக்குக் கொண்டு செல்லும்.
மனித
இனத்தின் பலவீனத்தை அறிந்துகொண்டு அதில் நாம் மூழ்கிவிடாமல் கடந்து
செல்வது எப்படி என்பதைப் போதிப்பதில் உறுதியாக இருந்தார்.
பகவானின்
மொத்த வாழ்வுமே இந்த உலகிற்காக அர்ப்பணிக்கப்பட்டது.
அவர் செய்த எல்லாமே பிறத்தியாருக்காகத்தான். இந்த புத்தி மனசு
நான்கிற அகங்காரம்தான் நாம் என்று தப்பர்த்தம்
செய்துகொண்டிருந்த நம்மை அதிலிருந்து ஆன்மவிடுதலை அளிக்க விரும்பினார். இதற்காக அவர் ஆத்ம விசாரம்
என்ற முறையை நமக்கு அளித்து அதை செயல்படுத்துவது எப்படி
என்று பயிற்றுவித்தார். அவரது இருத்தல் மற்றும் அருளின் மூலமாக தேடுபவர்களுக்கு பயனுள்ள உதவிகளை வழங்கினார்.
ஒரு
நாள் பகவான் பிறத்தியார் பிணி தீர்ப்பதற்காக ஆஸ்ரம
மருந்து வளாகத்தின் அருகே நின்றுகொண்டிருந்தார். அவரது படுக்கையின் அருகே நின்று கொண்டிருந்த நான் என் கண்களை
அவர் மீது படரவிட்டேன். எங்கள்
இருவருக்குமிடையில் வார்த்தைகள் எதுவும் பரிமாறப்படவில்லை. ஆனால் அவரது குளிர்ச்சியான கருணை பொழியும் கண்கள் என் மீது அன்பையும்
அமைதியையும் பொழிந்ததை என்னால் எப்போதும் மறக்கமுடியாது. இதைப் படிப்பவர்களை இது ஒரு சிறிய
நிகழ்ச்சியாகத் தெரியலாம். ஆனால் கணக்கிடமுடியாத அமைதியும் அருளும் தோய்ந்த அந்த ஒரு பார்வையில்
அவரது அருள் எப்போதும் என்னுடனிருக்கிறது என்ற பாதுகாப்பும் நம்பிக்கையும்
பிறந்தன. அவர் ஸ்தூல சரீரத்தை
விட்ட நாற்பது வருடங்களுக்குப் பிறகும் இப்போதும் அதே அருள் என்
மீது பாய்ந்து என்னைச் சூழ்ந்து வழிநடத்துவதாக உணர்கிறேன். அதை எப்படி வார்த்தைகளால்
விவரிக்கமுடியும்?
ஓரு
முறை புதுச்சேரி ஆளுநரின் தனிச் செயலர் நிறைய விளக்கமான கேள்விகளை பிரெஞ்சில் எழுதிக்கொண்டு வந்திருந்தார். அந்தக் காகிதத்தை பகவான் கையில் கொடுத்துவிட்டு அவரது படுக்கைக்கு எதிரில் இருக்கும் ஜன்னலில் அமர்ந்துகொண்டார். பிரெஞ்சில் கேள்விகளைப் பார்த்ததும் பகவான் என்னை மொழிமாற்றம் செய்யச்சொன்னார். [பலராம ரெட்டி ரமணாஸ்ரமம் வருவதற்கு முன்பாக பிரெஞ்ச் ஆளுகையில் இருந்த புதுச்சேரியில் அரபிந்தோ ஆஸ்ரமத்தில் நிறைய வருஷங்கள் இருந்ததால் பிரெஞ்சு மொழியில் ஓரளவு தேர்ச்சிபெற்றிருந்தார்]
வார்த்தைக்கு
வார்த்தை பிரெஞ்சு மொழியிலிருந்து மொழிமாற்றம் செய்ய நான் திணறுவதைக் கண்ட
பகவான்….
“அப்படியெல்லாம்
வேண்டாம். சுருக்கமாச் சொல்லு” என்றார்.
நான்
கேள்விகளை ஒரு முறை பார்த்துவிட்டு
அவர் அந்தக் கேள்விகளுக்கு வார்த்தைப்பூர்வமாக பதில்களை எதிர்ப்பார்க்கவில்லை என்று அனுபவப்பூர்வமான பதிலை எதிர்பார்க்கிறார் என்றும் சொன்னேன்.
பகவான்
சிறிது நேரம் மௌனமாக இருந்தார். பின்னர் தனது முகத்தை மெதுவாகத்
திருப்பி கேள்வி கேட்டவரின் மீது கண்களைப் படரவிட்டார்.
முப்பது விநாடிகள் கழிந்திருக்கும். கேள்வி கேட்டவரின் மேனி நடுங்க ஆரம்பித்து
உதற ஆரம்பித்துவிட்டது.
“பகவானே!
வேண்டாம்.. இப்ப வேண்டாம்! தயவு
செய்து பகவானே! இப்ப வேண்டாம்” என்று உளற ஆரம்பித்துவிட்டார்.
நான்
பகவானுக்கு அருகில் நின்று இந்த அசாதாரணமானக் காட்சியைப்
பார்த்து பகவான் எவ்வளவு பெரிய அற்புதப் பிறவி என்று அதிசயப்பட்டுக்கொண்டிருந்தேன்.
அவர் சக்தியின் களஞ்சியம். இருந்தாலும் நம் மீது அன்பும்
மென்மையு கருணையும் கொண்டிருக்கிறார்.
1950ம்
வருஷ துவக்கத்தில் மெட்ராஸ் அரசின் மந்திரி சீதாராம ரெட்டி ஆஸ்ரமத்திற்கு வந்திருந்தார். நிர்வாகம் என்னை அழைத்து மந்திரியை பகவான் இருக்கும் நிர்வாண அறைக்குக் கூட்டிச் செல்லச் சொன்னது. பகவான் முன்னிலையில் நாங்கள் உள்ளே நுழையும் போது வித்தியாசமான ஒரு
கதிரொளி அல்லது மெல்லிய ஒளி அந்த அறைக்குள்
என் கண்ணில்பட்டது. பகவான் மீது எனக்குள்ள பக்தியினால்
அப்படித் தெரிகிறது என்று நான் நினைத்தேன். அறையை
விட்டு நாங்கள் வெளியே வந்த பிறகு மந்திரி
என்னைப் பார்த்துக் கேட்டார்.
“மகரிஷியின்
அறையில் அது என்ன ஒரு
கதிரொளி?”
எனக்கு
உடனே கணபதி முனியின் சத்வாரிம்சத்லிருந்து இரண்டாவது பாடல் நினைவுக்கு வந்தது.
“ரத்னங்கள்
குவிந்துள்ள கடல் போல உயர்குணங்கள்
மிகுதியாக நிறைந்தவர். மேகத்தினால் மறைக்கப்பட்ட சூரியனைப் போல சாதாரண மனித
சரீரத்தில் பேரொளியைக் கொண்டவர்.”
எனது
வாழ்வின் பல நிகழ்வுகளில் மஹரிஷியின்
வழிகாட்டுதல் இருப்பதை நான் நம்புகிறேன். அவரைக்
குருவாக வரித்து சரணாகதி அடைந்தது என் வாழ்வில் நானெடுத்த
முடிவுகளில் சிறந்ததாகும்.
-
பகவான் ரமணர் தன் கைப்பட வரைந்த திரு அருணை மலை. அருணாச்சல சிவ .அருணாச்சல சிவ . அருணாச்சல சிவ . அருணாச்சலா
-
https://mahaperiyavaa.blog/2024/02/02/ithanai-yamatrai-mahaperiyava-karavalambam-in-sri-pradosham-mamas-voice/