ஹரியோ சிவகுருவோ  வரருசியோ யதிவரனோ 


பகவான் ஸ்ரீ ரமணரை விருபாக்ஷி குகையில் வந்து தரிசித்தவர் அமிர்தானந்த யதீந்திரர்.

        இவர் கேரளாவில் உள்ள ஆல்வாய் என்னும் இடத்தில் பிறந்து நாராயண நம்பூதிரி என்னும் பூர்வாசிரம பெயர் கொண்டவர். எல்லோராலும் அமிர்தானந்தர் என்று குறிப்பிடப் பட்டார். ஸ்ரீ பகவானிடம் மிகுந்த ஈடுபாடு உள்ளவர்.

       ஒரு நாள் விருபாக்ஷியில் ஸ்ரீ பகவான் பேரில் ஏற்பட்ட பக்தி பரவசத்தில்----யாரோ இந்த அருணாசல ரமணன் ? சிவனோ ! விஷ்ணுவோ ! குகன் றானோ ! மற்றெந்த தேவனோ தெரியவில்லையே ! ----என்ற கருத்தில் ஓர் மலையாள விருத்தம் எழுதி ஸ்ரீ பகவான் வெளியில் சென்றிருந்த சமயம் அவர்கள் அமரும் இருக்கையின் மீது வைத்து விட்டார்.

       ஸ்ரீ பகவான் வந்து அமரும்போது அந்த சீட்டினைக் கண்டு எடுத்து படித்துப் பார்த்தார்கள். உடனே அந்த காகிதத்தின் பின்பக்கத்திலேயே அதே மலையாள விருத்தத்தில் பதில் எழுதிக் கொடுத்தார்கள்.

அமிர்தானந்தர் :----

அருணாசல சிகரோபரி விருதார்னொரு குகையில்

கருணாகர விருதாவலி பகவான்முனி ரமணன்

ஹரியோசிவ குருவோவர ருசியோ யதிவரனோ

அரிவானுரு குதுகம்மம ஹ்ருதயேகுரு மஹிமா

ஸ்ரீ பகவான் :----

ஹரியாதிய பரஜீவரத ஹரநீரஜ குகையில்

அறிவாய்ரமி பரமாத்மனெ அருணாசல ரமணன்

பரமாதர பரனாய்ஹ்ருதி பரனார்னுரு குகையார்ந்

நறிவாம்விழி துறநீநிஜ மறிவாயது வெளியாம்.

       ஸ்ரீ பகவான் தான் அருளிய மேற்படி மலையாள விருத்தத்தை தமிழிலும் மொழிபெயர்த்து அருளினார்கள்.

அந்த பாடல் :----

அரியாதியி தரசீவர தகவாரிச குகையில்

அறிவாய்ரமி பரமாத்துமன் அருணாசல ரமணன்

பரிவாலுள முருகாநல பரனார்ந்திடு குகையார்ந்து

அறிவாம் விழி திறவாய்நிச மறிவாயது வெளியாம்.

       இந்த பாடல் ஸ்ரீ அருணாசல ஸ்துதி பஞ்சகத்தில் தனி விருத்தமாகச் சேர்க்கப் பட்டுள்ளது.

       ஸ்ரீ குஞ்சு சுவாமிகள் எழுதியுள்ள --

எனது நினைவுகள் -- என்ற நூலில் இந்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்