புதன், 16 ஜூலை, 2014



பெரியவர் பெயரில் பாபம்


ஸ்ரீ காஞ்சி மஹாசுவாமிகள் தன் வாழ்நாள் முழுதும் வரதக்ஷிணையை எதிர்த்து வந்தார்கள். `வரதக்ஷிணை கேட்காதீர்கள். அது சாஸ்திர விரோதம். பாவம்' என்று படித்துப் படித்து சொல்லி வந்தும் அதைப் பெண் வீட்டாரிடம் இருந்து பெறுவது மற்றுமின்றி கல்யாணப் பத்திரிகையிலும் அவர் அனுமதி பெறாமலே `ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜகத்குரு சங்கராச்சாரிய சுவாமிகள் அனுகிரஹத்துடன்' என்று எழுதுவார்கள். இதைப் பற்றி ஸ்ரீ சுவாமிகளிடம் பிரஸ்தாபித்த பொழுது அவர்கள் வருத்தத்துடன் சொன்னார்கள்:  `என் தபஸ் இந்த விஷயத்திலே போறாது போலருக்கு. தபஸ்விகள் சொல்லை ஜனங்கள் தப்பாம கேட்பா. நான் இன்னும் நிறைய தபஸ் பண்ணனும் போலருக்கு'. 

இப்படி மற்றவர்கள் தவறைத் தன் குறையாஎத்தனை மஹான்கள் ஏற்றுக் கொள்வார்கள்?  



கருத்துகள் இல்லை:

Pradosha mama's voice, courtesy sage of kanchi site

https://mahaperiyavaa.blog/2024/02/02/ithanai-yamatrai-mahaperiyava-karavalambam-in-sri-pradosham-mamas-voice/