செவ்வாய், 10 ஜூன், 2014

`மைத்திரீம் பஜத' பாடலின் மொழிபெயர்ப்பு: 

நட்பினை நன்றே பேணுக நீரே
உட்கிடை உளங்களை ஈர்த்திடும் அதுவே
தன்னைப் போன்றே அனைவர் தமையும்
உன்னிப் பரிந்து அணைத்திடு வீரே
போரினால் ஆவதென்? விடுக போரினை
போட்டியும் பகையும் வேண்டாம் என்பீர்
பிறர்மேல் ஆதிக் கமேநீர் செய்தல்
முறையிலை காணீர் விடுக அதனை
செறிவுடைத் தரணித் தாயிங் குள்ளாள். 
பரிவுடன் தருவாள் வேண்டிய தெல்லாம்
உலகத் தலைவனே தந்தையாய் உள்ளான்
அலகிலா அன்பினில் அணைப்பான் நமையே
அருமை மக்காள், அடக்கம் பழகுக
தருமம் செய்க கனிவே கொள்க!
உலகில் உள்ள மாந்த ரெல்லாம்
பல்வகைச் செல்வமும் இன்பமும் பெறுக!
(Tamil Translation by Smt Vijaya Sankaranarayanan, Chennai)

ச கோபாலனின் `தவம் பலித்தது' அமுத சுரபி ஜூன் 14 கட்டுரையிலிருந்து

கருத்துகள் இல்லை:

Pradosha mama's voice, courtesy sage of kanchi site

https://mahaperiyavaa.blog/2024/02/02/ithanai-yamatrai-mahaperiyava-karavalambam-in-sri-pradosham-mamas-voice/