முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சிறப்புடையது

PERIVA IN SRI SANKARA SARITHAM   உபகாரப் பணியிலும் அபகாரம்!   ஊர் ஸமாசாரமெல்லாம் சொன்னேன். ஸொந்த ஸமாசாரமாக இரண்டு சொல்கிறேன் :   ஒரு ஊரில் (ஸ்ரீமடத்தின் ஆதரவில்) அன்னதானம் செய்தது. ரொம்பப் பேர் , ஏழைகள் , வயிறாரச் சாப்பிட்டு விட்டு , மனஸ் குளிர்ந்து வாழ்த்திக்கொண்டு போனார்கள். (சமையல் வகைகள்) எல்லாம் நிறையப் பண்ணியிருந்தும் , மூட்டை அரிசி வடித்திருந்தும் , கொஞ்சங்கூட பாக்கியில்லாமல் எல்லாம் ஜனங்கள் வயிற்றுக்குப் போச்சே என்று ரொம்ப த்ருப்தியாக இருந்தது. த்ருப்தி என்றால் என்ன ? ‘ நாமாக்கும் பண்ணிவிட்டோம்’ என்ற ‘ஈகோ’தான்!   பாத்ரம் , பண்டம் எல்லாம் தேய்த்து , அடுத்த ஊருக்குக் கிளம்பத் தயாராக இருந்த ஸமயம். அப்போது ஒரு பத்துப் பதினைந்து ஏழை ஜனங்கள் — ஸ்தீரிகள் , குழந்தைகள் உள்பட — லொங்கு லொங்கு என்று ஓடிவந்து , “ சோறு , சோறு” என்று கேட்க ஆரம்பித்ததுகள். எட்டு , பத்து மைல் தாண்டி எங்கேயோ இருக்கிறவர்கள். அன்னதான ஸமாசாரம் அவர்கள் காதுக்கு லேட்டாகத்தான் போயிருக்கிறது. உடனே , பாவம் , வெய்யிலில் அத்தனாம் தூரம் ஓடி வந்திருக்கிறதுகள்! இங்கேயானால் பருக்கை சாதம் இல்லை! அண்டா , குண்டான் எல

சமீபத்திய இடுகைகள்