புதன், 28 ஜூன், 2017

`THERE ARE NO OTHERS'  - BHAGAVAN 

எழுத்துச் சித்தர் பாலகுமாரனிடம் அவருடைய குரு நாதர் யோகி ராம் சுரத் குமார் முன்னொரு காலத்தில் திருவண்ணாமலை ஸ்ரீ ரமணாஸ்ரமத்தில் நடந்த ஒரு சுவையான சம்பவத்தை கூறினாராம் அந்த சம்பவம் பின்வருமாறு.
பகவான் ஸ்ரீ ரமணரின் ஆசிரமம் உருவாகிக் கொண்டிருந்தது. அதில் நிரந்தரமாக பல பேர் வந்து சேர்ந்து கொண்டார்கள். அவரவருக்கான இருப்பிடங்களும் சமையற்கூடமும் தோன்றிவிட்டது. ரமணரை சந்திக்க ஒரு ஐரோப்பியர் வந்திருந்தார். ரமணரை புரிந்து கொள்ள ஆசைப் பட்டார். ரமணாசிரமத்தில் தங்கினார். ஆசிரமத்தில் ஒருவர் அரிசி களைந்து கொண்டிருக்க , இன்னொருவர் காய்கறி நறுக்கிக் கொண்டிருக்க , வேறொருவர் சமையற்கூடங்களை , பார்வையாளர் இடங்களை பெருக்கிக் கொண்டிருக்க , இன்னொரு இளைஞர் ஆசிரமத்தில் உள்ள பொருள்களைத் துணியால் தூசு போகத் துடைத்துக் கொண்டிருக்க , வேறொருவர் தோட்டத்தை பராமரிக்க , சகலரும் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அமைதியான அந்த காலை நேரத்தில் பகவான் ஒரு மர பெஞ்சில் அமர்ந்தபடி தொலை தூரம் வெறுமே பார்த்துக் கொண்டு அசையாது அமர்ந்து கொண்டிருந்தார். நேரம் கடந்தது வேலைகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. பகவான்
அசையாது அமர்ந்திருந்தது ஐரோப்பியருக்கு ஆச்சரியமாக இருந்தது. மெல்ல ரமணரை அணுகினார். கை கூப்பினார். ஏதோ கேட்க விரும்புகிறார் என்பது அந்தச் சைகையில் தெரிந்தது. பகவான் என்ன என்று தலை அசைத்தார்.

“WHEN EVERY OTHERS ARE WORKING. WHY ARE YOU IDLING” ( இங்கு அனைவரும் வேலை செய்து கொண்டிருக்க நீங்கள் மட்டும் ஏன் சும்மா அமர்ந்திருக்கிறீர் ) என்று கேட்டார். சிறிது நேரம் அமைதியாக இருந்த ரமணர் மெல்ல தலை தூக்கி “ THERE IS NO OTHERS ” என்று ஆங்கிலத்தில் பதில் கூறினார். மற்றவர் என்று இங்கு எவரும் இல்லை என்று அர்த்தம் தொனித்தது. இங்கு வேலை செய்பவர் அனைவரும் நானே எனக்கும் , அவர்களுக்கும் எந்தப் பிரிவும் இல்லை. நான் என்ற இடத்தை தக்க வைத்துக் கொள்ளவில்லை. நான் இல்லாததால் அந்த இடத்தில் மற்றவர்கள் நிரம்பியிருக்கிறார்கள். மற்றவர்கள் நிரம்பியிருப்பதால் நான் அங்கு இல்லை என்கிற அர்த்தம் தொனித்தது. THERE IS NO OTHERS. எல்லாமும் நானே என்கிற தத்துவம் வெளிப்பட்டது.


Pradosha mama's voice, courtesy sage of kanchi site

https://mahaperiyavaa.blog/2024/02/02/ithanai-yamatrai-mahaperiyava-karavalambam-in-sri-pradosham-mamas-voice/