வியாழன், 2 மார்ச், 2017

Shankara!: "Difference between a Sarangi and this Mandolin?" ...

Shankara!: "Difference between a Sarangi and this Mandolin?" ...: "என் பதினேழாவது வயதில் காஞ்சி மகாப்பெரியவர்  முன் மாண்டலின் இசைக் கச்சேரி செய்தேன். அது,  ஆர்வமிக்க ஒருவனுடைய கலை வெளிப்...

வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

மதுரமொழி: ஸ்ரீ ரமண மகரிஷியும் தேகப்ரக்ஞை இன்மையும் - 3

மதுரமொழி: ஸ்ரீ ரமண மகரிஷியும் தேகப்ரக்ஞை இன்மையும் - 3: கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஒருமுறை ரமண பகவான் முன்னிலையில் தரிசனக் கூடத்தில் உட்கார்ந்திருக்கையில் அவரது ஆள்காட்டி விரலில் தாங்கமுடியாத வல...

வெள்ளி, 11 நவம்பர், 2016

வியாஸர் பதினெட்டு புராணங்களையும் பண்ணி முடித்தபின் சிஷ்யர்கள் அவற்றின் ஸாராம்சத்தை ஒன்றிரண்டு ச்லோகங்களில், ஸுலபமாக நினைவில் வைத்துக் கொள்ளும்படியாகச் சுருக்கித் தரும்படிப் பிரார்த்தித்தார்களாம். உடனே அவர் “ஒன்றிரண்டு ச்லோகம் எதற்கு? இந்தப் பதினெட்டுப் புராணம் மட்டுமின்றி மொத்தமிருக்கிற கோடிப் புஸ்தகங்களின் ஸாரத்தையும் அரை ச்லோகத்திலேயே சொல்கிறேன்”, “ச்லோகார்தேந ப்ரவக்ஷ்யாமி யதுக்தம் க்ரந்தகோடிஷு |” என்று ஒரு ச்லோகத்தின் முதல் பாதியாகச் சொல்லிவிட்டு மற்ற பாதியில் அந்த ஸாரமான தத்துவத்தைச் சொன்னாராம்:
”பரோபகார: புண்யாய பாபாய பரபீடநம் ||”
இருக்கிற அத்தனை கோடி மத சாஸ்திர புஸ்தகங்களுக்கும் உயிர் நிலையான தத்வம் என்னவென்றால், “புண்யம் ஸம்பாதிக்க வேண்டுமானால் பரோபகாரம் பண்ணு; பாபத்தை மூட்டை கட்டிக் கொள்வதனால் மற்ற ஜீவன்களுக்குக் கஷ்டத்தைக் கொடு” என்பதுதான் – என்று இதற்கு அர்த்தம்.
பாபம் எது என்று தெரிந்து கொண்டு அதை விலக்குவதற்கும், புண்யம் எது என்று தெரிந்து கொண்டு அதைப் பண்ணுவதற்குந்தான் மதம் என்பதே இருக்கிறது. இங்கே நம் மதத்துக்கு முக்யமான மூல புருஷர்களில் முதன்மையாயிருக்கிற வ்யாஸாசார்யாள் பர உபகாரம் தான் புண்யம், பர அபகாரம்தான் பாபம் என்று சொல்கிறாரென்றால், அதற்கப்புறம் நம் மதத்தில் பரோபகாரத்துக்கு இடமுண்டா என்ற வாதத்துக்கே இடமில்லை. – ஜகத்குருஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

செவ்வாய், 18 அக்டோபர், 2016

“ ஒரு ஞானி பக்தர்களைக் காப்பாற்றுவான் . ஆனால் சங்கலபத்தாலே இல்லை. அவனது சந்நிதி விசேஷத்தாலே ”

Courtesy Sri ramana mandiram
சந்நிதி மகிமை
ஒரு நாள் பக்தர் ஒருவர் மிகுந்த மன வேதனையுடன் பகவானிடம் ஒரு சந்தேகம் கேட்டார். “ பகவான் நீங்க நினைச்சா பக்தர்களுடைய தலையெழுத்தை மாற்ற முடியுமா ? ”
பகவான் சிரித்தார் . ஞானிக்கு ஏது சங்கல்பம் ? ஒரு ஜீவன் முக்தனுக்கு சங்கல்பம் இருக்கவே முடியாது , அது சாத்தியமில்லை , ” என்றார்.
அப்போ எங்க கதிதான் என்ன ? எங்க கஷ்டங்களைப் போக்க உங்க கிட்டதானே வேண்டுகிறோம். அதற்கு பலனில்லையா என்றார் ஒரு பக்தர்.
கருணை தோய்ந்த குரலில் , “ ஒரு ஞானியின் சந்நிதியில் அமர்ந்தால் ஒருவரது பாவச்சுமை கணிசமாகக் குறையும். ஞானிக்கு சங்கல்பம் இல்லை. இருந்தாலும் அவனது சந்நிதி ரொம்ப சக்தி வாய்ந்தது. ஞானி பேசாம இருப்பான். அவன் சந்நிதி , தலையெழுத்தை மாற்றும் , காப்பாற்றும் , சாந்தி தரும். பக்குவமானவனுக்கு ஆன்மானுபவம் தரும். எல்லாம் தானா நடக்கும். அவனுக்கும் அதுக்கும் எந்த சமபந்தமும் இருக்காது , ” என்று பேசினார் பகவான்.
“ ஒரு ஞானி பக்தர்களைக் காப்பாற்றுவான் . ஆனால் சங்கலபத்தாலே இல்லை. அவனது சந்நிதி விசேஷத்தாலே ” என்றார் மகரிஷி

சனி, 15 அக்டோபர், 2016