வெள்ளி, 3 ஜூன், 2016


பகைவருக்கும் அருளிய பகவான்
(Courtesy: Dinamani, Tamil Daily) 
விருபாக்ஷ குகையில் பகவான் தங்கியிருந்த நாட்களில் கூட இருந்த மிகச் சில அடியார்களில் பெருமாள் சுவாமியும் ஒருவர்.  ஒரு முறை பழனிச்  சுவாமியும் பெருமாள் சுவாமியும் வெளியே போயிருந்த சமயம் விருபாக்ஷ  குகைக்கு சில பயங்கரத் தோற்றமுடைய பைராகிகள் வந்தனர். பகவான் தனியாக இருக்கிறாரா என்பதை உறுதி செய்து கொண்டு அவரிடம் `நாங்கள் பொதிகை மலையிலிருந்து வருகிறோம். அங்கே ஒரு பெரிய சித்தரைச் சந்தித்தோம். அவர் உங்களை பொதிகை மலைக்கு அழைத்து வரச் சொன்னார்.' என்றனர். பகவான் வெறுமனே மௌனம் காத்தார். சில மர வெட்டிகள் பகவான் குகையில் சில பைராகிகள் இருப்பதை வழியில் பழனிச் சாமியிடமும் பெருமாள் சாமியிடமும் சொல்ல அவர்கள் குகைக்கு விரைந்தனர். பெருமாள் சாமி பைராகிகளைப் பார்த்து விட்டு சந்தைக்கு விரைந்து சென்று ஒரு பெரிய அண்டாவையும் டின் டின்னாக எண்ணையும் வாங்கிவந்து விறகுகள் சேர்த்து அண்டாவில் எண்ணையைக் கொட்டி கொதிக்க வைக்க ஆரம்பித்தார். பைராகிகள் அது என்னவென்று வினவ `நீங்கள் சொன்ன சித்தர் என் கனவிலும் வந்தார். நாளை சில பைராகிகள் உங்கள் குகைக்கு வருவார்கள். அவர்கள் சக்தி வாய்ந்தவர்கள். நீ வேண்டுமென்றால் அவர்களைச் சோதிக்க அவர்கள் உடம்பில் காய்ச்சிய எண்ணையைக் கொட்டிப் பார். எந்த தீக்காயமும் அவர்களைத் தீண்டாது.' என்றார். அதைச் செய்து பார்க்கத் தான் எண்ணெய் காய்ச்சுகிறேன். சித்தர் வார்த்தையை நான் தட்டக்கூடாது அல்லவா?' என்றார். பைராகிகள் பெருமாள் சுவாமி உள்ளே சென்ற சமயம் மெதுவாக நழுவி விட்டனர். பகவான் உட்பட அனைவரும் நடந்தது பார்த்து சிரித்து ரசித்தனர்.               
.பகவானுடன் தங்கியிருந்த நாட்களில் அவரும் மற்றவர்களும் சாப்பிட ஊருக்குள் சென்று பிக்ஷை எடுத்துக் கொண்டு வருவது பெருமாள் சுவாமியின் வழக்கம். ஒருமுறை ஒரு அழகான பாடலை பகவான் பெயரில் பெருமாள் சுவாமி எழுதி வந்தார். தாம் தான் எழுதியதாகச் சொன்னதும் பகவான் அதைப் படித்துப் பார்த்துவிட்டு அவரைப் பாராட்டி முருகனாரிடம் அதை நோட்டுப் புத்தகத்தில் எழுதிப் பாதுகாக்கச் சொன்னார். நான்கு நாட்களுக்குப் பிறகு இன்னுமொரு பாடல் கொண்டு வந்தார். பகவானும் மற்றவர்களும் அவரைப் பாராட்டினர். சில நாட்களுக்கு ஒருமுறை பெருமாள் சுவாமி பாடல் கொண்டு வருவதும் அது வராவிட்டால் `ஏன் பிறகு எழுதவில்லை?' என்று பகவான் கேட்பதுமாக இருந்தது. ஒரு பத்து பாக்கள் வந்த பிறகு தான் அவற்றை எங்கோ தாம் படித்தது பகவான் நினைவிற்கு வர அவர் முருகனாரை திருவருட்பா புத்தகம் எடுத்து வரச் சொல்லிப் பார்த்தார். அதில் ராம பதிகம் என்ற தலைப்பில் அந்தப் பாடல்கள் அப்படியே இருந்தன. `ராமா ' என்ற இடங்களில் எல்லாம் `ரமணா' என்று பெருமாள் சுவாமி மாற்றியிருந்ததும் வெட்டவெளிச்சமானது. மற்றவர்கள் கிண்டலுடன் பெருமாள் சுவாமியைப் பார்த்ததும் பகவான் `என்ன செய்வது? இங்கே வருகிற எல்லோருமே பாடவும் எழுதவும் தான் செய்கிறார்கள். முடிந்தவர்கள் எழுதுகிறார்கள். முடியாதவர்கள் எழுதியதைப் பயன்படுத்தி படித்துப் பார்த்து ரசிக்கிறார்கள். இப்போது என்ன? ரமணாவும் ராமாவும் ஒன்று தான். விடுங்கள்' என்றார்.                         

ஆரம்ப காலக் கட்டத்தில் ஸ்கந்தாஷ்ரமத்திற்கு பெருமாள் சுவாமி மேலாளராக இருந்தார். பின்னர் ரமணாஷ்ரமம் ஆரம்பிக்கப் பட்ட பின்னரும் சிறிது காலம் பணியாற்றினார். பொதுப் பணம் கையாண்ட குற்றத்தில் அவரை பகவானின் பூர்வாசிரம தம்பி சின்ன சுவாமி நீக்கிவிட்டு அவரே மேலாளர் பொறுப்பேற்றார். அப்போது முதல் பகவான் மேல் பெருமாள் கோபத்துடன் இருந்தார். பகவான் பக்தராக இருந்த சமயத்தில் பொது மக்களிடமிருந்து பணம் சேகரித்து ஒரு அருமையான பகவான் சிலையைச் செய்து பெருமாள் சுவாமி வழிபட்டு  வந்திருந்தார்.  பின்னாட்களில் அதே கல் சிலையை திருவருணை வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று மக்களிடம் `இதன் மேல் துப்புங்கள். செருப்பு மாலை போடுங்கள்' என்று சொன்னார். பகவானைப் பற்றி தெரிந்திராத ஒரு நபருக்குக் கள் வாங்கிக் கொடுத்து அவர் பகவானைக் கண்டபடி பேச வைத்தார். ஆனால் இது எல்லாவற்றையும் மிஞ்சும்படி அவர் செய்தது தான் பகவான் மேல் வழக்கு தொடுத்து அவரை வழக்காடு மன்றத்திற்கு இழுக்க முயன்றது. பகவான் ஒரு சன்யாசி என்பதால் அவர் உலகத்தைத் துறந்தவர். ஆஷ்ரமம் எதுவும் அவர் நடத்த முடியாது. தம்பி போன்ற பந்தங்களைத் துறந்தவர். ஆகவே சின்ன சுவாமியை வைத்தும் சொத்து சேர்க்க முடியாது. நான் தான் கந்தாஷ்ரம காலத்திலிருந்து இங்கே மேலாளராக இருக்கிறேன். ஆகவே நான் தான் ரமணாஷ்ரம சொந்தக்காரன்.' என்று பெருமாள் சுவாமி வாதாடினார்.        
இருப்பினும் பிரிட்டிஷ் அரசு பகவான் மகிமையை ஓரளவு அறிந்திருந்ததாலும் ஒரு பக்தர் முயற்சியாலும்   வழக்கு  விசாரணை ரமணாஷ்ரமம் வளாகத்திலேயே நடந்தது. பகவான் தான் ஒரு அதியாஷ்ரமி என்ற வாதத்தை முன் வைத்து வாதாடினார். `நான்கு ஆஷ்ரம விதிகளுக்கும் உட்படாதவர்கள் அதியாஷ்ரமிகள். இவர்களை சாஸ்திரம் முழு மனதோடு ஏற்றுக்கொள்கிறது. சுகர் போன்று பலர் இந்த ஆஷ்ரமத்தில் இருந்தவர்கள் தாம். நான் கல்யாணமாகாதவன் என்றாலும் சுகர் திருமணமும் செய்து கொண்டு சந்ததியையும் உண்டாக்கினார்.          அதியாஷ்ரமிகள் அது மாதிரி வீடு போன்று சொத்துகளையும் சேர்க்கலாம்.’    என்று விரிவாகத் தம் வாதத்தை முன்வைத்தார் பகவான். `என் ஆத்மாதான் என் குரு' என்றும் அவர் சொன்னபோது எதிர்தரப்பு வக்கீலால் எதுவும் பேச முடியவில்லை. வழக்கு ஒரு வழியாக ஆஷ்ரமம் சார்பாக முடிந்தது.    
ஆனாலும் பெருமாள் தொடர்ந்து அவதூறு செய்திகள் அடித்து ஆஷ்ரம வாசலிலேயே விநியோகிப்பது என்று பகவானுக்கு எதிராகப் பரப்புரையைத் தொடர்ந்து செய்து வந்தார். விரைவிலேயே அவர் உடல்நிலை மோசமானது. அவரிடம் பணம் பெற்றவர்கள் அவரை ஏமாற்றி விட்டனர். கையில் பணமும் இல்லாமல், உடல் நிலையும் மோசமாகி அவர் டவுனில் ஒரு பெஞ்சில் அமர்ந்து கொண்டு வருவோர் போவோரிடம் பிச்சை கேட்கும் நிலைக்குத் தள்ளப் பட்டார். 1945ம் வாக்கில் அவர் தங்கியிருந்த துர்கை ஆலயத்திருந்தும் அவர் அகற்றப்பட்டார். கடைசி நாட்களில் சேஷாத்ரி ஆஷ்ரம வளாகத்தில் ஒரு குடிசையில் தங்கினார்.        
சில ரமணாஷ்ரம பக்தர்கள் அவர் மேல் பரிதாபப்பட்டு பகவானின் ரகசிய அனுமதி பெற்று அவர் ஆஷ்ரமத்திலிருந்து மருந்தும் உணவும் சர்வாதிகாரிக்குத் தெரியாமல் கொடுத்து வந்தார்கள்.

பகவானுக்கு அவர் மேல் தொடர்ந்து பரிவு இருந்தது. `பாவம் பெருமாள் சுவாமி, ஆரம்ப காலத்தில் அவர் நமக்கு நிறைய செய்திருக்கிறார். நான் ஒரு முறை வயிற்றுக் கோளாறு வந்து உடலிலிருந்து நீர் வெளியேறி அவதிக்குள்ளான போது அவர் தான் என்னருகில் இருந்து சிஷ்ருசை செய்தார். பின்னர் என்னவோ கோர்ட் கேஸ்  அது இது என்று நிலைமை மாறி விட்டது. இன்று பாவம், நோயில் வாடுகிறார்.' என்றார்.           
கடைசியில் ஒரு வழியாகத் தம் தவறை பெருமாள் உணர்ந்தார். பகவானைப் பார்த்து `பகவான், உங்களுக்கு எதிராக நான் பல தவறுகள் இழைத்திருக்கிறேன். எனக்கு மன்னிப்பு கேட்கப் போவதில்லை. ஆனால் மறந்து விடாதீர்கள். நான் நரகம் தான் போகப் போகிறேன்.' என்றார். பகவான் வழக்கமான பரிவுடன் `அங்கேயும் நான் உங்கள் கூட இருப்பேன்' என்றார்.          
பக்தனாக நெடு நாட்கள் பகவான் கூட இருந்து பகைவனான பெருமாள் சுவாமியின் சரிதத்தில் நிறைய பெருமிதமும் படிப்பினையும் ஒரு சேரக் கலந்திருக்கின்றன.
(bhagavan ramana maharshi’s 66th aradhana falls on 4th May 2016)
ஸ்ரீதர் சாமா



வெள்ளி, 29 ஏப்ரல், 2016

‘Self has no space or time’

‘Self has no space or time’: One of his disciples, T.K. Sundaresa Iyer, in his book, “At the feet of Bhagavan,” narrates an episode. A poor couple from Peru, who considered Sri Ramana as Christ, was determined to meet him. So th

திங்கள், 23 நவம்பர், 2015



கார்த்திகை தீப தத்வம் - பெரியவா சொன்னது.


கார்த்திகைப் பண்டிகையன்று நிறைய அகல் ஏற்றி வைக்கிறோமல்லவா? இப்படி தீபத்தை ஏற்றும்போது ஒரு ஸ்லோகம் சொல்ல வேண்டும் என்று தர்மசாஸ்த்ரத்தில் விதித்திருக்கிறது.[/b]

கீடா பதங்கா மசகாச்ச வ்ருக்ஷா
ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா I
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ஜன்ம பாஜா
பவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ரா II

''புழுக்களோ, பக்ஷிகளோ, அல்லது ஒரு கொசுவாகத்தான் இருக்கட்டும், அந்தக் கொசுவோ, நம்மாதிரி உயிரில்லை என்று நினைக்கப்படுகிற வ்ருக்ஷமோ, இன்னும் ஜலத்திலும், பூமியிலும் எத்தனை தினுஸான ஜீவராசிகள் இருக்கின்றனவோ அவற்றில் எதுவானாலும் அதுவோ, மநுஷ்யங்களுக்குள்ளேயே பேதம் இல்லாமல் பிராம்மணனோ பஞ்சமனோ எவனானாலும் ஸரி, எதுவானாலும் ஸரி, இந்த தீபத்தைப் பார்த்துவிட்டால் அந்த ஜீவனுடைய ஸகல பாபங்களும் நிவ்ருத்தியாகி, இன்னொரு ஜன்மா எடுக்காமல் நித்யானந்தத்தில் சேரட்டும்'' என்று இந்த ஸ்லோகத்துக்கு அர்த்தம்.

ஜலத்திலும் பூமியிலும் இருக்கிற ப்ராணிகள் மட்டும்தானா என்றால் அப்படி இல்லை. முதலிலேயே பக்ஷிகளையும் (பதங்கா:) கொசுக்களையும் (மசகா: - மசகம் என்றால் கொசு. 'மஸ்கிடோ' இதிலிருந்து வந்ததுதான்!) சொல்லிவிட்டதால் ஆகாசத்தில் பறக்கிற பிராணிகளையும் சொல்லிவிட்டதாக அர்த்தம். ஆகாசத்தில் பறந்தாலும் இந்தக் கொசு ஜலத்தில்தான் முட்டை இடுகிறது. பக்ஷி கிளைகளில்தான் வாழ்ந்து கூடு கட்டிக் குஞ்சு பொரிக்கிறது. மீன் ஜலத்தில் மட்டும்தான் இருக்கும். தவளை ஜலத்திலும் இருக்கும், பூமியிலும் இருக்கும். அநேக பிராணிகளால் பூமியில் மட்டும்தான் வசிக்க முடியும். இப்படியெல்லாம் பல தினுஸில் பிரித்துப் பிரித்துச் சொல்லி, அத்தனை உயிரினங்களும் பாபம் நிவ்ருத்தியாகி ஸம்ஸாரத்தைத் தாண்ட வேண்டும் என்று இந்த ஸ்லோகம் ப்ரார்த்திக்கிறது.

இந்த கார்த்திகை தீபத்தை எந்தப் பிராணி பார்த்தாலும் அதற்கு நித்ய ச்ரேயஸ் உண்டாகட்டும் என்று சொல்லியிருக்கிறது. 'த்ருஷ்ட்வா' என்று ஸ்லோகத்தில் வருவதற்கு'பார்த்தால்'என்று அர்த்தம். வ்ருக்ஷம் - மரம் எப்படிப் பார்க்க முடியும்?நம் மாதிரி அதற்குக் கண், பார்வையெல்லாம் உண்டா?தாவரத்துக்கும் பலவிதமான உணர்ச்சிகள் இருப்பதாக இப்போது ஸயன்ஸ்படியே சொன்னாலும் அதற்குப் பார்வை உண்டா என்று தெரியவில்லை. அதனால் எனக்கு ஒன்று தோன்றுகிறது. 'பார்த்தால்'என்று ஸ்லோகத்தில் சொல்லியிருந்தாலும், ''பார்க்காவிட்டாலும் பரவாயில்லை;மரம் மாதிரிப் பார்க்க சக்தியில்லாவிட்டாலும் பரவாயில்லை; அல்லது பார்க்கிற சக்திவாய்ந்த பிராணிகளாக இருந்தும்கூட இந்த தீபத்தைப் பார்க்காவிட்டாலும் பாதகமில்லை;இந்த தீபத்தின் ப்ரகாசமானது அதைப் பார்க்கிறவர், பார்க்காதவர் எல்லார் மேலும் படுகிறதோ இல்லையோ?அம்மாதிரி இதன் ப்ரகாசம் படுகிற எல்லைக்குள் இருக்கிற ஸகல ஜீவராசிகளுக்கும் பாப நிவ்ருத்தி, ஜன்ம நிவ்ருத்தி, சாஸ்வதமான ச்ரேயஸ் கிடைக்க வேண்டும்''- என்றிப்படி அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது.

தீபத்தின் ஒளி எப்படி வித்யாஸம் பார்க்காமல், பிராம்மணன், பஞ்சமன், புழு, பக்ஷி, கொசு, மரம், மற்ற நீர்வாழ் ப்ராணிகள், நிலம் வாழ் விலங்கினங்கள் இவற்றின் மீது படுகிறதோ அப்படியே நம் மனஸிலிருந்து அன்பு ஒரு தீபமாக, எல்லோரையும் தழுவுவதாகப் பிராகாசிக்க வேண்டும். இப்படிப்பட்ட அகவொளியோடு, புற ஒளியாக தீபத்தை ஏற்றி மேலே சொன்னது போல் ப்ரார்த்திக்க வேண்டும்.
முன்பெல்லாம் சொக்கப்பானை என்று ஆலயத்திலிருந்து தீபத்தைக் கொண்டுவந்து பெரிதாக ஏற்றினார்களே, திருவண்ணாமலையில் இப்போதும் மலை உச்சியில் மஹா பெரிய ஜோதியாக தீபம் ஏற்றுகிறார்களே, இதன் உள்ளர்த்தம் என்ன?சின்ன அகலமாக இருந்தால், அதன் ப்ரகாசம் கொஞ்ச தூரம்தான் பரவும். சொக்கப்பானை என்றால் அதன் ப்ரகாசம் ரொம்ப தூரத்துக்குத் தெரியும். அண்ணாமலை தீபம் மாதிரி மலையில் ஏற்றி வைத்துவிட்டாலோ, அது எத்தனையோ ஊர்கள் தாண்டிக்கூடத் தெரியும். அத்தனை பெரிய எல்லைக்குள் இருக்கிற ஸகல ஜீவஜந்துக்களின் மீதும் இந்தப் பிரகாசம் பட்டு அவற்றின் பாபங்கள் போகவேண்டும் என்ற உத்தமமான சிந்தனையில்தான் சொக்கப்பானை, அண்ணாமலை தீபம் என்றெல்லாம் நம் பூர்விகர்கள் ஏற்பாடு பண்ணியிருக்கிறார்கள்.

ஸாதரணமாக இரண்டு கால் ப்ராணி, நாற்கால் ப்ராணிகள்தான் அதிகம். வண்டுக்கு ஆறு கால். சிலந்திக்கு எட்டுக் கால்கள். மரவட்டை, கம்பளிப் பூச்சி என்று எடுத்துக் கொண்டால் அதற்கு எண்ணி முடியாத கால்கள். வேதத்தில் அடிக்கடி 'த்விபாத்'' சதுஷ்பாத்' என்று இருகால், நாற்கால் ப்ராணிகள் க்ஷேமத்தைக் கோருகிற மாதிரியே எத்தனை காலுள்ள ப்ராணிகளானாலும் அவற்றுக்கும், இன்னும் பாம்பு மாதிரி, மீன் மாதிரி காலே இல்லாத ப்ராணிகளுக்கும் க்ஷேமம் உண்டாகட்டும் என்று மந்திரங்கள் இருக்கின்றன.

பரம ஞானிக்கு பிராம்மணன் பஞ்சமன் (ப்ராம்மணே ... ச்வபாதே) என்ற வித்யாஸம் தெரியாது என்று கீதையில் (5.18) சொல்லியிருக்கிறது. நமக்கும்கூட, காரியத்தில் பேதத்தைப் பார்த்தாலும் மனஸில் சுரக்கும் அன்பில் வித்யாஸமே கூடாது என்கிற மாதிரிதான் ரந்திதேவன் முதலில் பிராம்மணனுக்கும் கடைசியில் பஞ்சமனுக்கும் தானம் பண்ணியிருக்கிறான். இந்தக் கார்த்திகை தீப ஸ்லோகத்திலும் ''ஸ்வபசா ஹி விப்ரா:என்று பஞ்சமன், ப்ராம்மணன் இருவரையும் சொல்லியிருக்கிறது. க்ஷேமத்தைக் கோரும்போது ஜாதி வித்யாஸமே இல்லை. நல்லவன் கெட்டவன் என்றும் வித்யாஸம் பார்க்கக் கூடாது. மஹாபாபத்தைச் செய்துவிட்டு நரகவாஸிகளாயிருப்பவர்களிடமும் அன்பு பாராட்டி, அவர்களுக்கும் உபகாரம் செய்யச் சொல்வது நம் சாஸ்த்ரம். அதைப்பற்றிக் கொஞ்சம் சொல்கிறேன்.

Courtesy:  http://periva.proboards.com

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

இன்று (26-8-15-புதன் கிழமை) புனிதம் நிறைந்த நாள். 
ஆகஸ்டு 26,2015, புதன் கிழமை ரொம்பவும் சிலாக்கியமான நாள்-....மஹாபெரியவா!!
ஆயுஷ்மான் யோகம், பவ கரணம், ஸௌம்ய வாஸர ம் (புதன் கிழமை), இந்த மூன்றும் ஒன்று சேர்நது வந்தால் அந்த நாள் ரொம்பவும் சிலாக்கியமான நாள் என்று மஹா பெரியவா சொல்லியிருப்பது ஞாபகமிருக்கலாம். வரும் ஆகஸ்டு 26,2015, புதன் கிழமை அப்பேறபட்ட ரொம்பவும் சிலாக்கியமான நாள்.
I am repeating below the episode,, in which Our Mahaperiyavaa has clarified in His own style WHAT DOES" AYUSHMAN BHAVAH SOWMYA "MEAN?, for the benefit of those who have not read this yet
When Maha Periyavaa was giving darshan, four or five Vidwans, who had come for darshan, were sitting on the floor.
In the course of his conversation (with the devotees), Maha Periyavaa asked them, “When Bhaktas do namaskaram to me, I bless them with the name ‘Narayana, Narayana’. What do you people, who are samsaris say for blessing?”
“We say, ‘dIrgha AyushmAn bhava sowmya‘; only that is the custom.”
“What does it mean?”
“Remain in saukyam for a long time’ is its meaning.”
Maha Periyavaa asked all the Vidwans present there, one by one. Everyone said the same meaning.
Maha Periyavaa remained in silence for sometime. Then he said, “The meaning you all said is a wrong one.”
The Pandits were taken aback. Everyone of them was a "bade", "bade" Vidwan, and had earned the Siromani title.
For the Samskrta Vaakyam ‘Dirgha AyushmAn bhavah’ even those with a little knowledge of Samskrtam can tell the meaning. Such simple words! Yet Periyavaa says the meaning is wrong?! The Pandits were looking at each other!
“Shall I tell it myself…..?” Maha Periyava shot the next arrow!!
The Pandits sat straight. & sharpened their ears .
“Of the twenty-seven Yogas, one is named Ayushman. Of the eleven Karanas, one is the called the Bhava. Among the week days, the Sowmya Vaasaram refers to a Wednesday. When –the Ayushman Yoga and the Bhava Karana–occur together on a Wednesday -Sowmya vasaram, , that day is said to be shlagya-very auspicious day. Therefore, if these three occur together, whatever good phalas would be got, I bless that you may get all those fruits…”
All the Vidwans got up in together and did Shashtanga namaskaram to Maha PeriyavaaL.
P.S . During the regular cycle of the Yoga, Karana & the Vaasaram, the configuration of all the three occurs once in a way & that day is considered to be very auspicious . Now this is happening on Aug26th. this year
Incidentally or coincidentally, that day is ekadasi too...
(இணையத்தில்  கண்டது )