சந்நிதி மகிமை
ஒரு நாள் பக்தர் ஒருவர் மிகுந்த மன வேதனையுடன் பகவானிடம் ஒரு சந்தேகம் கேட்டார். “ பகவான் நீங்க நினைச்சா பக்தர்களுடைய தலையெழுத்தை மாற்ற முடியுமா ? ”
பகவான் சிரித்தார் . ஞானிக்கு ஏது சங்கல்பம் ? ஒரு ஜீவன் முக்தனுக்கு சங்கல்பம் இருக்கவே முடியாது , அது சாத்தியமில்லை , ” என்றார்.
அப்போ எங்க கதிதான் என்ன ? எங்க கஷ்டங்களைப் போக்க உங்க கிட்டதானே வேண்டுகிறோம். அதற்கு பலனில்லையா என்றார் ஒரு பக்தர்.
கருணை தோய்ந்த குரலில் , “ ஒரு ஞானியின் சந்நிதியில் அமர்ந்தால் ஒருவரது பாவச்சுமை கணிசமாகக் குறையும். ஞானிக்கு சங்கல்பம் இல்லை. இருந்தாலும் அவனது சந்நிதி ரொம்ப சக்தி வாய்ந்தது. ஞானி பேசாம இருப்பான். அவன் சந்நிதி , தலையெழுத்தை மாற்றும் , காப்பாற்றும் , சாந்தி தரும். பக்குவமானவனுக்கு ஆன்மானுபவம் தரும். எல்லாம் தானா நடக்கும். அவனுக்கும் அதுக்கும் எந்த சமபந்தமும் இருக்காது , ” என்று பேசினார் பகவான்.
“ ஒரு ஞானி பக்தர்களைக் காப்பாற்றுவான் . ஆனால் சங்கலபத்தாலே இல்லை. அவனது சந்நிதி விசேஷத்தாலே ” என்றார் மகரிஷி